இன்றைய ராசி பலன் – 19-09-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செய்யும் காரியங்களில் தாமதப் பலன் கிடைக்கக் கூடும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு சிறப்பான லாபம் காணலாம். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக உள்ளது. கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சீர்குலையாமல் இருக்க ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். யோகத்தில் இருப்பவர்கள் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் மன அமைதி பெறலாம். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சோர்வுடன் காணப்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுவதால் பொறுப்புகள் அதிகரிக்கலாம். சுய தொழில் புரிபவர்களுக்கு மந்த நிலை இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டு சமாளித்து விடுவீர்கள். ஆரோக்கியத்தில் முதுகு வலி கழுத்து வலி போன்ற தொந்தரவுகள் ஏற்பட கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நாட்டமில்லாத மந்த நிலை காணப்படும். சுய தொழில் புரிபவர்களுக்கு கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நினைத்தப்படி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டி இருக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாக கூடும்.ஒரு சிலருக்கு புதிய வீடு மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான பலன்கள் கிடைக்க கூடிய அற்புதமான நாளாக அமைந்து இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்தபடி லாபம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் அமையும். வேலை இல்லாதவர்களுக்கு சாதகமான வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் அனுகூலமான பலன்கள் உண்டு.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் அளிக்க கூடிய வகையில் இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். எதிர்பாராத நபர்களின் வருகையால் எதிர்பாராத விஷயங்கள் நடைபெறக் கூடும். இதுவரை இருந்து வந்த கடன் தொகைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

துலாம்
i
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குளிர்ச்சியான பொருட்களை, ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக அமைந்துள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய கூடும். பொருளாதார ரீதியான முன்னேற்றத்தில் ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் போன்ற விஷயங்களில் தேவையில்லாத வீண் விரயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகளுக்கு சற்றும் அஞ்சாத அல்லது இடம் கொடுக்காத உங்களுக்கு அதிக அளவு குழப்பங்கள் ஏற்படக்கூடிய சாத்திய கூறுகள் உண்டு. கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். வராகி தேவி வழிபாடு செய்வது மனக்குறை தீர்க்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலைத்து நிற்கும். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பகைவர்கள் கூட நண்பர்களாய் மாறும் சந்தர்ப்பங்கள் அமையும். கடன் பிரச்சினைகள் குறையும். பயணங்களின் பொழுது கவனமாக இருப்பது நல்லது.

கும்பம்

கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைந்துள்ளது. எடுக்கும் முயற்சிகளில் தோல்வியைத் தழுவ கூடும் என்பதால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற சண்டைகள் உருவாகலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் வந்து கொண்டே இருக்கும். புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. இந்த வேலை கிடைத்தால் தான் செய்வேன் என்று இல்லாமல் எது கிடைத்தாலும் மனமார ஏற்றுக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான வெற்றி பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். பெண்களுக்கு விருப்பங்கள் நிறைவேற கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. அம்பாளை வழிபட நினைத்தது நடக்கும்.