இன்றைய ராசி பலன் – 4-11-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உங்களுக்கு முன்னேற்றத்தை தடை செய்யும் சில விஷயங்கள் தவிடு பொடியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முடிவுகள் எடுப்பதில் சற்று எச்சரிக்கை தேவை. சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் இனிய நாளாக அமையும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பொறுமை அதிகம் அவசியம் தேவைப்படக்கூடிய நாளாக அமையும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரணையாக நடத்துவது மன அமைதிக்கு வழிவகுக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சுயநலமாக செயல்படாமல் இருப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் புதிய நவீன பொருட்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய மனக்கவலைகள் நீங்கள் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. இதுவரை விரக்தியில் இருந்த நீங்கள் சற்று தெளிவு பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் சிறப்பானதாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பேச்சிற்கு முன்னுரிமை கொடுப்பது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மற்றவர்களின் முன்னிலையில் உங்களுடைய கை ஓங்கி இருக்கும். குடும்பத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத் தேவைகளை அறிந்து பொருளாதாரத்தில் முடிவுகளை எடுப்பது சிறந்த பலன் தரும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய வேடிக்கையான பேச்சால் மற்றவர்களின் மனதை எளிதாக கவர்ந்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் அதிகம் இருக்கும். இதன் காரணமாக அலைச்சல் மற்றும் டென்சன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியான போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் எச்சரிக்கை தேவை. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மன சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வேலை அமையக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பெண்கள் சாதனை புரிய கூடிய விஷயங்களில் சாதக பலன் உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த ஊடல்கள் நீங்கி அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. அமைதியான சூழ்நிலையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது மன அமைதிக்கு வழிவகுக்கும். குடும்பப் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வெறுப்பை உண்டாக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய விஷயங்கள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன வரவு அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு கீழ் வேலை பார்ப்பவர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்ல பலன் தரும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் ஏற்பட சந்தர்ப்பங்கள் உண்டு. கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவதன் மூலம் சிறப்பான முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய மேலதிகாரிகளின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிப்பது நன்மைகளை கொடுக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு விஷயத்திலும் பொறுமையுடன் செயலாற்றுவது நல்லது. முக்கிய முடிவுகளை தள்ளி வைத்தது நல்ல பலன் தரும். வாகன ரீதியான பயணங்களை எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் வாக்குவாதங்களை தவிர்த்து மௌனத்தை கடைபிடிப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர் வரும் பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கையும், தைரியமும் பிறக்கும். சமுதாயத்தில் உங்களுக்கு இருக்கும் ஆதரவு வலுவாக கூடிய வாய்ப்புகள் உண்டு. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் காலதாமதமானாலும் வெற்றி தரும்.

x