இன்றைய ராசி பலன் – 3-11-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் எதிர்பாராத வரவுகள் சுப நிகழ்வுகள் என்று குதூகலத்துடன் காணப்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றி தரும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் நன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணி சுமை காரணமாக சோர்வுடன் காணப்படுவார்கள். தேவையற்ற அவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களின் நேர்மையற்ற நடவடிக்கைகள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்வதில் இடையூறுகள் ஏற்படலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலையுடன் காணப்படுவீர்கள். தேவையற்ற விஷயங்களை குழப்பிக் கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க கூடிய திறமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் போட்டியாக செயல்படுவார்கள்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையை அதிகரிக்க கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. சமுதாய நலன் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் மற்றும் வியாபாரத்தில் இடமாற்றம் போன்றவை ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான விஷயத்தில் வீண் விரயங்கள் ஏற்படலாம். வாகன ரீதியான பயணத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் நம்பிக்கைக்கு உரியவராக மாறுவீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் மன அமைதி காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கப் போகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் காலதாமதம் ஆகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரியும் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம்.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் உணர்ச்சிவச படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எவ்வளவு பொறுமையாக இருந்தாலும் உங்களை ஒரு சிலர் வேண்டுமென்றே சீண்டிப் பார்ப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு ஒரு முறைக்கு பலமுறை ஆலோசிப்பது நல்லது. தொழில் சார்ந்த விஷயங்களை பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவால்களை சந்திக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை திறம்பட சமாளித்து விடுவீர்கள். பெண்களுக்கு பணிச்சுமை காரணமாக சோர்வு உண்டாகும். எனவே ஓய்வு தேவைப்படும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இழந்த விஷயங்களை திரும்பப் பெறக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. எதிர்பாராத மாற்றங்கள் சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோக ரீதியான பயணங்களில் சற்று எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதூர்யமாக நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் முற்போக்கு சிந்தனை முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் மன மகிழ்ச்சி இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. பொருளாதாரம் சீராக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். கடன் தொகைகள் வெகுவாக குறைய கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலை இல்லாதவர்கள் மனதிற்குப் பிடித்த வேலையை அமைத்துக் கொள்வார்கள். தொழில் சார்ந்த விஷயத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வீடு மனை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. வீண் வாக்கு வாதங்கள் மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மௌனம் ஒன்றே மன நிம்மதி தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும்.

x