இன்றைய ராசி பலன் – 10-09-2020

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி காணப்படும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஒருசிலருக்கு புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அம்பிகை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் இனிய நாளாக இருக்கப் போகிறது. எடுத்த காரியங்கள் எல்லாம் நீங்களே எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி கிடைக்கும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு வாகன வகையில் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். சுய தொழில் புரிபவர்களுக்கு இலாபகரமான நாளாக இருக்கும். முருக வழிபாடு செய்வது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரக்கூடிய அற்புதமான நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. பைரவர் வழிபாடு மன அமைதியைத் தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சந்திக்கக் கூடிய நாளாக இருப்பதால் சிக்கனமாக இருப்பது மிகவும் நல்லது. தேவையற்ற ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவது நலன் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் ஓரளவு சமாளித்து விடுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் பல முறை யோசித்து செயலாற்றும் நாளாக அமைய இருக்கிறது. எந்த விஷயத்தை எடுத்தாலும் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. பயணங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதால் டென்ஷன் இருக்கும். குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனமாக இருப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது ஜாமீன் கையெழுத்து போடுவது போன்ற விஷயங்களில் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல் ஆற்றுவது நன்மை தரும். குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மன அமைதியை வேண்டுபவர்கள் சிவபெருமானை வழிபடுவது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான அமைப்பாக இருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்க இருக்கிறது.தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் மூலம் கூடுதல் பலம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். விஷ்ணு பகவானை வழிபட நன்மை பிறக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நடைபெறக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்தி வரும்.வேலை இல்லாதவர்களுக்கு எதிர்பாராத அளவில் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். லக்ஷ்மி தேவியை வழிபட்டு வாருங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் தரக்கூடிய அற்புதமான அமைப்பு என்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.குடும்பத்தில் இருக்கும் மூத்த அவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அமைதி பிறக்கும். குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி பிறக்கும். வெளியிடங்களில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுவது மன அமைதிக்கு வழிவகுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. சகோதர சகோதரிகளுக்கு இடையில் இருக்கும் உறவு நிலை சுமூகமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் மன அமைதி பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் கை கூட கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மன சங்கடங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் உத்தியோகத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். சனிபகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை நோக்கி பயணிக்கும் படியாக இருக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் இழுபறியில் இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். கடன் பிரச்சினைகள் தீர கூடிய வழிகள் பிறக்கும். ஒருசிலருக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். அம்மனை வழிபட்டால் மன அமைதி நிலைக்கும்.