இன்றைய ராசிபலன் 21 டிசம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் யோகமாக இருப்பதால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன்களை பெற போகிறீர்கள். சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் எதிர்மறையாக நடைபெற வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை சாதுரியமாக செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கவலைகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சுபகாரியத் தடைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி காணும் யோகம் உண்டு.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளியிட பயணங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற அலைச்சல் உண்டாகும் என்பதால் கவனம் தேவை. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னிறைவு உண்டாகும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான பலன்களை பெறக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் துவங்குபவர்ககளுக்கு அதிர்ஷ்ட பலன் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்ற இறக்கமான பலன்கள் கிடைக்க இருப்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த சிறுசிறு சண்டை சச்சரவுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான பலன்கள் கிடைக்க இருப்பதால் எதிலும் முன்னேற்றம் காணலாம். திடீர் சுப செய்திகள் இல்லம் தேடி வரும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் வந்தடைய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். சுயதொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் அதிர்ஷ்டம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கிய ரீதியான சிறு சிறு குறைபாடுகள் வந்து நீங்கும் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறும் யோகமுண்டு. கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் வெளியிட பயணங்களின் போது கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரிய மனிதர்களின் ஆசீர்வாதம் பெறுவீர்கள். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்ப்பது நல்லது.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனமகிழும் படியான நல்ல சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிறு தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு திடீர் தன லாபம் பெருகும். எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காணலாம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். இளைய சகோதரர் வழியில் அனுகூல பலன் உண்டு. பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்ற இறக்கமான பலன்களை கொடுக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய பணி ஆட்களை நியமிக்கும் எண்ணத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுப் பெறும் வாய்ப்புகள் அமையும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.