இன்றைய ராசிபலன் 18 டிசம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் சோர்வுடன் காணக்கூடிய ஒரு நாளாக இருக்கும். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு தேவையற்ற விமர்சனங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக இருக்கிறது என்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது உத்தமம்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் வெற்றி வாகை சூடும் கூடிய அற்புதமான நாளாக இருக்கும். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல எதிர்ப்புகளை சந்திக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. சுயதொழிலில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகப்பலன் உண்டாகும். வெளியிடங்களில் அனுபவ ரீதியான சில நிகழ்வுகளை எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிக தொகையை கையாளும் பொழுது கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை நிரூபித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த பனிப்போர் நீங்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பதில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளிடம் சில மனக்கசப்புகள் ஏற்படுத்திக் கொள்வீர்கள். வெளியிட பயணங்களில் கவனம் தேவை.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திருமண தடைகள் நீங்கி சுபிஷம் உண்டாக கூடிய நல்ல நாளாக இருக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாள் சந்திக்க இருந்த நபர் ஒருவரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய முயற்சிகள் யாவும் வெற்றி அடைய கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. வீண் விரையம் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையில் கூடுதல் பொறுப்பு தேவை.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு தேவையற்ற கோபம் ஏற்படும் என்பதால் நிதானத்துடன் இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படுத்திக் கொள்வது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகம் இருக்கும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்களை தரக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிரிகளின் தொல்லை குறையும். கூடவே இருந்து குழி பறிப்பவர்களை இனம் காண கூடிய சந்தர்ப்பங்கள் வாய்க்கும்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் செய்வீர்கள் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க செய்வீர்கள். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் பெருகும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்:

மீன ராசியில் பிறந்த நாள் உற்சாகம் தரக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சுய மதிப்பீடு செய்யும் வாய்ப்புகள் அமையும். வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் போராட்டம் முடிவுக்கு வரும். தேவையற்ற கடன்களை வாங்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் குறையும்.