இன்றைய ராசிபலன் 05 டிசம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்ட செயல்கள் திட்டமிட்டபடி நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் லாபம் பெருகும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சுய தொழிலில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மௌனம் காக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற வார்த்தைகளை, தேவையற்ற நபர்களிடம் பிரயோகிக்காமல் இருப்பது உத்தமம். சுய தொழிலில் இருப்பவர்கள் மற்றவர்களை எளிதில் நம்பி விடாமல் சுயமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் குறையும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு எதையும் சாதுரியமாக செயல்படுத்துவதில் சாதகப் பலன்கள் கிடைக்கும். நினைத்தது நினைத்தபடி நடக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் பெறும் பாக்கியம் உண்டாகும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சில மாற்றங்கள் செய்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. அரசு வழியில் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதில் இடையூறுகள் ஏற்படலாம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய உழைப்பை நினைத்து நீங்களே பெருமை படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற கவலைகளை நீக்கி விட்டு நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் இருப்பது உத்தமம். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்கள் பங்குதாரர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில தடைகள் ஏற்படலாம். சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணும் யோகம் உண்டு.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. இறை வழிபாடுகளில் அதிக ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் சில விஷயங்கள் உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். உற்றார், உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய பாதைகள் ஏற்படக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீண்ட நாள் சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சுயதொழிலில் எதிர்பார்க்காத மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் சாதகப் பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நிதானமாக செயல்படுவது நல்லது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுத்தாமல் அமைதி காப்பது உத்தமம். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்லவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.