இன்றைய ராசிபலன் 2 டிசம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில அற்புத நிகழ்வுகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நீண்ட நாட்களாக வேண்டும் என்று நினைத்த காரியம் முடியக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சுப செலவுகள் வரும். உத்யோகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கடினமான விஷயங்கள் கூட சுலபமாக முடிவடைய கூடிய ஒரு நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுய தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் பொறுமை அவசியம் தேவை.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல்வேறு நன்மைகள் நடக்க கூடிய நல்ல நாளாக இருக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சகோதர வகையில் லாபம் யோகமும் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்திறமை அதிகரித்து மற்றவர்களிடம் பாராட்டுகளை வாங்க கூடிய பாக்கியம் உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களை போட்டி போட்டு முந்தி தள்ள பலரும் முனைவார்கள். எத்தகைய எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வம்பு வழக்குகள் வரும் என்பதால் வெளியிடங்களில் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விட்டு சென்றவர்கள் மீண்டும் உங்களை தேடி வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய திறன் இருக்கும். தேவையற்ற மனக் கசப்புகளை தவிர்த்து ஒருவருடன் ஒருவர் பேசி தீர்த்துக் கொள்வது உத்தமம். சுய தொழிலில் நீங்கள் அரசு வழி காரியங்கள் மூலம் அனுகூல பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்கலாம்.

 

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய அதிகாரபூர்வமான சில பொறுப்புகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற செலவுகள் வரும் என்பதால் கூடுமானவரை திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் நீங்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் அத்தனை தடைகளையும் தாண்டி முன்னேறக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சில வேலை நுணுக்கங்களை மேலதிகாரிகள் நேரம் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் உண்டு.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. நாளாக நீங்கள் எதிர்பார்த்த விஷயம் ஒன்று நடக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டை சச்சரவுகளை பேசி பேசி வளர்க்காமல் அமைதி காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் நினைத்த காரியத்தை நினைத்தபடி சாதித்துக் காட்டுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் உங்கள் பகைவர்களை சூழ்ச்சிகளை அறிந்து அதனை தகர்த்து எரிவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில அவமானங்களை சந்திக்க கூடிய சூழல் உருவாகும் என்பதால் கவனம் தேவை. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்குமென்பதால் கூடுமானவரை திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பேச்சுவார்த்தைகளில் இனிமை தேவை. சுயதொழிலில் யாரிடமும் உணர்ச்சிவசப் படாமல் இருப்பது நல்லது. முன்கோபம் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் வெற்றி காண கூடிய அமைப்பாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் லட்சியத்தை நோக்கி பயணிக்க கூடிய பாதை திறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் தனி திறமைகளை வெளி உலகிற்கு காட்ட கூடிய வாய்ப்புகள் அமையும். போக்குவரத்து தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை.