இன்றைய ராசிபலன் 24 நவம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று எதிர்பாராத ஒரு விஷயம் நடக்க போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை நடத்திக் காட்டுவது இடையூறுகள் ஏற்படும் என்பதால் சமயோசிதமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு குறைகளை சொல்லி காட்டாமல் அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் தீர்த்தமாக முடிவெடுக்க வேண்டும். செய்யலாமா? செய்யக்கூடாதா? என்கிற குழப்பத்துடன் முடிவெடுக்கக் கூடாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களிடம் இணக்கம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த ஒரு நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். குடும்பத்துடன் இருந்துவந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பதால் மனசஞ்சலம் கொள்ளத் தேவையில்லை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதையும் சாதிக்கும் துணிவு பிறக்கும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைபட்ட காரியங்கள் கூட இடையுறாமல் முடிவடையும் என்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபத்தை அடைய போகிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முடிவுகளுக்கு சாதாரண பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே புதிய புரிதல் உண்டாக வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு செயலும் தடையில்லாத வெற்றி அடையும் என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புகள் உண்டு. சக பங்குதாரர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் முடிவுகளுக்கு பலரும் சாதகமான பதிலை கொடுப்பார்கள். விமர்சனங்களை உதறிவிட்டு வெற்றியை நோக்கி பயணிப்பது உத்தமம்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு என்றோ நீங்கள் கொடுத்த தொகை இன்று உங்கள் கைக்கு வந்து சேர வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் முடியும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்து வருபவர்கள் திட்டமிட்டு ஒரு காரியத்தை செயல்படுத்துவது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்படும் என்பதால் விழிப்புணர்வுடன் வேலை செய்வது உத்தமம். குடும்ப நபர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுட செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு குலதெய்வ ஆசீர்வாதம் கிடைக்கும். இறை வழிபாடுகளில் அதிக ஆர்வத்தை செலுத்துவது நல்லது. உத்யோகத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையில்லாத இடையூறுகளை ஏற்படுத்த மறைமுக எதிரிகள் உருவாகலாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை சிந்தித்து செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் தரும். ஆரோக்கியம் மேம்பட்டு வரும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் இருக்கும் சலுகைகள் சாதகப் பலன் தரும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படமால் பார்த்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி காணப்படும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் ஏற்றம் காணலாம்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வது கூடாது. சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு முடிவையும் நிதானமாக எடுப்பது நல்லது. கொலை மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீடு தேடி புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவி உறவு சிக்கல் வந்து மறையும்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களுடைய இறக்கமான குணம் மற்றவர்களை எளிதாக இருக்கும் வண்ணம் அமைய இருக்கிறது. சுயதொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்களில் சாதகப் பலனைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. கணவன் மனைவி இடையே பேச்சில் இனிமை இருந்தால் மன அமைதி கிட்டும். ஆரோக்கியத்தில் அக்கறை இருப்பது நல்லது.