இன்றைய ராசிபலன் 23 நவம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்கள் உங்கள் பணிகளை நீங்கள் சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொருளாதாரம் மேம்படும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் முழு ஈடுபாட்டுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகிப்பு தன்மையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு அதிகம் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இதனால் சோர்வுடன் காணப்படலாம். பெண்களுக்கு எதிலும் ஒரு குறை இருக்கும் எனவே விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிறைவு இருக்கும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்க கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்து முடிப்பீர்கள். உங்கள் குண நலன்களால் மற்றவர்களுடைய பாராட்டுகளை பெறுவதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பிரச்சனைகள் வரலாம் என்பதால் விழிப்புணர்வு தேவை.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் பணி சுமை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. எனினும் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக கூடிய அற்புதமான அமைப்பு என்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் பெருகும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தடைகள் விலகி புது பாதை திறக்கும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆன்மீக ரீதியான எண்ணங்கள் மேம்பட்டு காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கணவன் மனைவி பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைத்து நீங்கள் எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்றி காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கலாம் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் உடைய முழு ஆதரவு கிடைக்கும். எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சமாளிக்க கூடிய தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு பெருகும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் அருமையை மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முடிவுகளுக்கு மற்றவர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மற்றும் மனைவி இடையே கருத்து வேறுபாடு வந்து நீங்கும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழும் படியான சில சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனதிலே இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது மூலம் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் வந்து மறையும். கூடுமானவரை உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது. தேவையற்ற இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முடிவுகள் மற்றவர்களுடைய ஆதரவைத் பெரும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தினரின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். பொருளாதார ரீதியான ஏற்றம் இருப்பதால் நீங்கள் நினைத்ததை வாங்குவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் மன அமைதி இருக்கும்.