இன்றைய ராசிபலன் 21 நவம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நல்ல நாளாக அமைய கூடியது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் தீராத பிரச்சினைக்கும் தீர்வு காணக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மனசாட்சியுடன் போராடக் கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள் ஆக இருக்கும். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் வந்து நீங்கும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் திட்டமிட்ட காரியங்கள் தடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எவ்வளவு தடைகள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் முயன்று போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் விரிசல் ஏற்படும். ஆரோக்கியம் சீராகும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையற்ற பேச்சுக்கள், தேவையற்ற சண்டைகளில் முடிவடைய கூடும் என்பதால் வெளியிடங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பிரச்சனைகள் வரலாம். எதையும் போராடும் உங்கள் தன்னம்பிக்கை மற்றவர்களை வியப்படையச் செய்யும். உத்தியோகத்தில் மன அமைதி இருக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய அற்புதமான வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்டகால எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும். சக பணியாளர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் முக்கிய முடிவுகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது உத்தமம். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சக போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் தீரும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் கொள்கையில் மாற்றங்களை பற்றி சிந்திப்பீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு மற்றவர்களுடைய ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் தொடர்ந்து இருக்கும். விமர்சனங்களை பொருட்படுத்தாமல் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தலைமை அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுயதொழிலில் பாதியில் நின்ற வேலைகள் கூட மீண்டும் இடையுறாமல் வெற்றி தரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிம்மதியான சூழலை காண்பீர்கள். புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் விட்டு சென்ற உறவுகள் கூட மீண்டும் வந்து இணைவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. வெளியூரிலிருந்து சுப செய்திகள் உண்டாகும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கும் இந்த நாள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எதிர்பார்ப்பதை விட பண ரீதியான பிரச்சனைகள் விரைவில் தீரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற கோபத்தினால் சில இழப்புகளை சந்திக்க நேரலாம் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொருட்களை வாங்கிக் குவிக்கும் யோகம் உண்டு.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடைய திறமைகளை எடை போடுவதில் அதிக நாட்டம் செலுத்துவீர்கள். புதிய வீட்டில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய திட்டங்களைத் தீட்டி மகிழ்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய வகையிலான அமைப்பு என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய பாக்கியம் அமையும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வீர்கள். இறை வழிபாடுகள் மீது அதிக ஆர்வம் ஏற்படும்.