இன்றைய ராசிபலன் 18 நவம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். இறை வழிபாடுகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு விதமான பதட்டம் உண்டாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மறைமுக பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். கணவன் மனைவியிடையே பேச்சில் இனிமை தேவை.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த வீண் விவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அனுசரணையாக இருப்பது நல்லது.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற மன சஞ்சலங்கள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு முறைக்கு இரண்டு முறை ஆலோசனை தேவை. புதிய புதிய வாய்ப்புகளைத் தேடி பயணம் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் நன்மதிப்பு உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை வாங்கி மகிழ்வீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிலும் வெற்றி காண கூடிய வாய்ப்புகள். புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நியாயத்தின் பக்கம் நின்றால் ஜெயம் உண்டாகும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் பலவீனத்தை அறிந்து அமைதி காப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்து பிரச்சினையில் சிக்கி கொள்ள தேவையில்லை. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அனுகூலப் பலன்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதால் இடையூறுகள் ஏற்படலாம். உத்யோகத்தில் மன அமைதி இருக்கும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கணவன் மனைவி கொண்டிருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து அன்பு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது மூலம் உங்கள் முன்னேற்றம் மெருகேறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. நீண்டநாள் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளியிடங்களில் சில நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் அமையும். சுயதொழிலில் நவீன உபகரணங்களை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தடைப்பட்ட சுப காரியங்கள் வெற்றி அடையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சிறிய சிறிய சங்கடங்கள் ஏற்பட்டு மறையும். கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் தீரும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய தைரியம் உண்டாகும். சுய தொழிலில் நீங்கள் நேர்மறையாக சிந்தித்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் உதவிக்கரம் கிடைக்கும். கேட்ட இடங்களில் இருந்து கேட்ட தொகை கைக்கு வரும். பொருளாதாரம் மேம்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாமர்த்தியமாக எதையும் பேசி சாதிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த சிறு சிறு பனிப்போர் நீங்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். சுய தொழிலில் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வருவதில் சிக்கல் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்த முயற்சி செய்வீர்கள். உங்களை நம்பி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைப்பீர்கள். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் சில தொந்தரவுகள் வரக்கூடும். வெளியிடத்தில் மூன்றாம் நபர்களிடம் எச்சரிக்கை தேவை.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முக்கிய நபர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பழைய கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அதிரடி சலுகைகள் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் வரும் என்பதால் சாமர்த்தியமாக செலவிடுவது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் உடைய வகையிலான அமைப்பு இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. சுயதொழிலில் நீங்கள் நினைத்த சில விஷயங்களில் கால தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.