இன்றைய ராசிபலன் 17 நவம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் புதுப்புது மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் பிரச்சனைகள் தீரும். தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்வீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்களை தரக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றியை காணும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பெரிதாக பிரச்சனைகள் ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நியாயத்தின் பக்கம் குரல் கொடுக்கக் கூடிய வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான பலன்களை பெறக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எடுக்கும் புதிய முயற்சியில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்கள் மூலம் மன குழப்பம் அடைய வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை உங்கள் சுய அறிவை பயன்படுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் கூடுதல் அக்கறை இருக்கும். பொருளாதாரம் ஏற்றம் காண்பதால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது. புதிய பொருட்கள் வாங்குவதில் தடைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்கள் விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது உத்தமம்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதுரியமாக செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு போட்டி பகைகள் மென்மேலும் வளரும் என்பதால் கூடுதல் உழைப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் தொல்லை நீங்கும். மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது உத்தமம்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடி அடையக் கூடிய வாய்ப்புகளை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். எடுக்கும் முயற்சிகளில் எவ்வளவு தடைகளும் சந்தித்தாலும் வெற்றி உங்களுக்குத்தான். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் நடைபெறும். சக பணியாளர்களின் ஆதரவை பெறுவீர்கள். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வருமான ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடைவதில் சிலர் இடையூறாக இருக்கலாம். தேவையற்ற வார்த்தைகளை வெளியில் விடாமல் மௌனம் காப்பது நல்லது. கணவன் மனைவி உறவுகள் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத மாற்றத்தை கொடுக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றவர்கள் மனம் கோணும் படி நடந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் தேவையற்ற மன உளைச்சலையும் ஏற்படுத்தலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்பட்டு வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் பாக்கியம் அமையும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் பெற இருக்கிறீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழில் ரீதியான போக்குவரத்து விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்ப பாரங்கள் குறையும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் கூடுமான வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாகன ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீண்ட நாள் நண்பர்கள் சந்திக்கும் வாய்ப்புகள் பெற இருக்கிறீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உடல் ரீதியான பிரச்சினைகள் தோன்றி மறையலாம். மற்றவர்களை விட உங்களை பற்றிய அக்கறை அதிகம் தேவைப்படக் கூடிய நாளாக இருக்கும். சுயதொழிலில் எண்ணியதை எண்ணியபடி நடக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்டகால பாக்கிகள் வசூல் ஆகும் யோகம் உண்டு. கடன் பிரச்சினைகள் குறைவதற்கு உரிய சந்தர்ப்பங்களை பெறுவீர்கள். புத்திர பாக்கியம் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

மீனம்:

நீங்க ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். பொருளாதார ரீதியான பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில்லை இடையூறுகள் ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.