இன்றைய ராசிபலன் 16 நவம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெளியில் அலைச்சல் அதிகரிப்பதால் சோர்வுடன் காணப்படலாம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்கள் காலதாமதம் ஆகும். கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசிக் கொள்வது அன்பு பெருக செய்யும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிலும் தன்மையுடன் பேசுவது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொள்வதால் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிகம் உழைக்க வேண்டிய சூழல் நிலவும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற விவாதங்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் வரும் என்பதால் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பான பலன்களை பெற இருக்கிறீர்கள். நீண்டநாள் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வராது என்று நினைத்த பணம் கூட கைக்கு வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளை வெளிக்கொணர வேண்டிய நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கடன் தொல்லைகள் நீங்க கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீண்ட நாள் சந்திக்க வேண்டிய நபர் ஒருவரை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சொன்ன சொல்லை காப்பாற்ற கூடிய எண்ணம் மேலோங்கி காணப்படும். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூல பலன்களை காணும் யோகம் உண்டு. குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் பிரியமானவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு ஆன்மிக சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றம் குறித்த விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் வட்டம் விரியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன அமைதியற்ற சூழல் இருக்கும் என்பதால் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நிதானத்துடன் இருக்க வேண்டிய நாள்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியமான அணுகுமுறையால் மற்றவர்களை எளிதாக கவர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் பங்குதாரர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடைய ஆலோசனையை கேட்டு முடிவெடுப்பது உத்தமம். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகளை பற்றி மற்றவர்களிடம் கூறுவதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதையும் ஒன்றுக்கு இரண்டாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வம்பு வழக்குகள் சாதகப் பலன் கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்ப வருமான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். பொருளாதார ரீதியான ஏற்றம் இருப்பதால் நீங்கள் நினைத்தவற்றை வாங்கும் வாய்ப்புக்களை பெறுகிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் துவங்க இருக்கும் புதிய விஷயங்கள் அனுகூல பலன் கொடுக்கும் வகையில் அமைய இருக்கிறது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சம உரிமை கிடைக்க போராட்டம் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்த்து கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதுமையை படைக்கக் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் மறையும்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் கலந்து ஆலோசித்து பிரச்சனைகளுக்கு உரிய முடிவை காணும் வாய்ப்புகளை பெறுவீர்கள். குடும்ப பிரச்சனைகளை தீர்த்து ஒற்றுமையை பலப்படுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையான இடத்தில் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். நினைத்ததை வாங்கக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். திட்டமிடல் வெற்றி தரும்.