இன்றைய ராசிபலன் 15 நவம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராதது நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பணிகளில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் நிலை அறிந்து செயல்படுவீர்கள். இடம், பொருள், ஏவல் பார்த்து பேச்சுக் கொடுப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி தரும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியம் எச்சரிக்கை தேவை.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக அமைய போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய தொகையை ஈடுபடுத்துவதன் மூலம் நல்ல லாபத்தை காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். பெண்களுக்கு இறை வழிபாடுகளின் மீது அதிக ஆர்வம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நேர்மறையாக சிந்திக்க கூடிய நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்கள் திறமையை மென் மேலும் மெருகேற்றி காட்ட முனைவீர்கள். சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நன் மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பேச்சில் இனிமை தேவை. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறந்த பலன்களை காண இருக்கிறீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை சுவையை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை திட்டமிடலுடன் செயல் படுவது நல்லது. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் வந்து மறையும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தங்கள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமான தடை நீங்கும். புதிய வேலை தேடி அலைபவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை அமையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை பூர்த்தி செய்யக் கூடிய சந்தர்ப்பங்களை பெறுவீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பணவரத்து சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். ஆரோக்யம் சீராகும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் ஆரோக்கிய ரீதியாக கூடுதல் அக்கறை தேவை. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு நிதானம் தேவை. வெளியிட போக்குவரத்து விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் அமைதியுடன் இருப்பது நல்லது.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நட்பு வட்டம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சமயோசிதமாக செயல்படுவது நல்லது. சக பணியாளர்களிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விமர்சனங்களை தைரியமாக எதிர் கொள்வது நல்லது.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த தொகை கைக்கு வருவது காலதாமதம் ஏற்படும். மூன்றாம் மனிதர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.