இன்றைய ராசிபலன் 11 நவம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிகம் பணிச்சுமை இருப்பதால் சோர்வுடன் காணப்படுவார்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்கள் சூழ்நிலை அறிந்து மௌனம் காப்பது நல்லது. தேவையற்ற வார்த்தைகளை விட்டுவிட்டால் பின்னர் மீட்டு எடுப்பது கடினம் ஆகிவிடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அக்கறையுடன் செய்வார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஸ்ட யோகங்களை பெறக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் இருந்து பணவரவு இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணிச்சுமை அதிகம் இருப்பதால் டென்சனுடன் இருப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஜெயம் உண்டாக கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்க்கும் லாபம் பெற சமயோஜிதமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் மேலதிகாரிகள் உடன் இணக்கமாக இருப்பது நல்லது. ஆடம்பரத்தை குறைத்துக் கொண்டால் நல்லது நடக்கும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள கூடிய வாய்ப்புகள் அமையும். வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை மீறி நீங்கள் சில விஷயங்களை செய்யக்கூடும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் செயல்களில் கவனம் தேவை. நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதம் தரும் யோகம் உண்டு. நீங்கள் நினைத்த விஷயத்திற்கு நேர்மறையான பலன்கள் உண்டாகும். தடைபட்ட சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்த வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான ஏற்றம் இருப்பதால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்கள் நிலுவையில் இருந்து வந்த பழைய விஷயங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் நாளாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். வெளியூர் மற்றும் வெளிநாடு விஷயங்களில் கவனம் தேவை. நண்பர்கள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் போட்டியாளர்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீண்ட நாள் முடிக்க முடியாத வேலைகளை கூட சுலபமாக முடித்துக் காட்டுவீர்கள்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான பலன் தரும் நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான திறமையால் உங்கள் கை ஓங்கி இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் அதனைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.