இன்றைய ராசிபலன் 9 நவம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் நன்மைகள் உண்டாகும். வராத இடத்தில் இருந்து வரக்கூடிய பணவரவுகள் வந்து சேரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தெய்வீக அனுகிரகம் உண்டாகும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்கள் பழைய பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய அத்தியாயம் தொடங்கக் கூடிய நல்ல வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்பட கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உங்கள் மாறுபட்ட அணுகுமுறையால் சில விஷயங்களில் வெற்றியைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்களிடம் சிலர் உதவி கேட்டு வரக்கூடும். உங்களுடைய புண்ணிய பலன்களை அனுபவிக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தேவையற்ற கோபத்தை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் புதிய முயற்சிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாளில் தேவையற்ற பணி சுமை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அருகே ரீதியான பாதிப்புகள் வந்து மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அனுகூல பலன் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு திட்டமிட்டு செயல்பட வேண்டிய நல்ல நாளாக அமைய இருக்கிறது.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும் கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விரும்பிய பொருட்களை வாங்கும் எண்ணம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க பாடுபடுவீர்கள். எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை எதிர்த்து தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் மன நிம்மதி பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தொட்டது துலங்கும் அற்புத நாளாக இருக்கும் என்பதால் வெற்றி எதிலும் காணலாம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அதிரடி மாற்றங்கள் மூலம் சில உபயோக விஷயங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடையலாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் எதையும் சமயோஜிதமாக சிந்தித்த செயல்படுவதன் மூலம் ஏற்றம் காணலாம்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு எதிலும் முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு முக்கிய விஷயங்களில் ஆலோசனை தேவை. சுயமாக எடுக்கும் முடிவுகளுக்கு எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற மன உளைச்சல் இருப்பதால் கூடுமானவரை அமைதியுடன் இருப்பது நல்லது.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். மனைவிவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் தீர கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு புதிய விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய கடன் பாக்கிகளை வசூல் செய்யும் யோகம் உண்டு. எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத செய்திகள் வந்து சேரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு என் சக பணியாளர்கள் மூலம் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படலாம் என்பதால் கூடுமானவரை விழிப்புடன் இருப்பது நல்லது.