இன்றைய ராசிபலன் 6 நவம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு முன்கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுமானவரை எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுபகாரியத் தடைகள் நீங்கி பேச்சு வார்த்தையில் சுமூகம் நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிக கோபம் ஆபத்தை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலைகளை திட்டமிட்டு செயல்பட வேண்டியதாக இருக்கும். அவசர நேர வேலைகள் சிக்கலைத் தரும். ஆரோக்கியத்தில் அக்கறையாக இருப்பது நல்லது.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு முடிவு கிடைக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய திறமைகள் மற்றவர்கள் பாராட்டும்படி இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்த இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வியாபார ரீதியான வீண் விரயங்களை சந்திக்கலாம்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் எடுப்பதில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய தன்னம்பிக்கையை உயர்த்திக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அனுபவம் பல்வேறு இடங்களில் உங்களுக்கு உதவி செய்யக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உங்கள் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில அனுகூல பலன் பெறலாம். குடும்பத்தில் மூத்த சகோதரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் அக்கறை தேவை. அலட்சியம் ஆபத்தை உண்டாக்கும் என்பதை மனதில் வைத்து செயல்படுவது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வீண் விரயங்களை சந்திக்கலாம் என்பதால் ஆடம்பரத்தை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்கள் அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும் அற்புத நாளாக இருக்கும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லாபத்தை அதிகரித்து காட்ட கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் கூடுதல் உழைப்பைக் கொடுத்து மற்றவர்களுடைய எண்ணங்களில் விதைகளை வித்திடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும் இருக்கக் கூடிய அற்புத வாய்ப்புகள் உண்டு. எதையும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் வந்து மறையும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தீட்டிய திட்டங்கள் நிறைவேற கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நினைத்தபடி லாபம் அமையும். உங்கள் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சரிசமமாக இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் தொழில் ரீதியான முக்கிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவுகள் எதுவும் இருக்காது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். கூடுமானவரை குடும்பத்தில் மௌனம் காப்பது நல்லது. வேலையில்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வேலை அமையும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்கள் கருத்துக்களுக்கு மற்றவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சொத்து ரீதியான பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புக்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்கள் சமயோஜித ஆற்றலால் நடக்கவிருக்கும் விளைவுகளைத் தடுத்து நிறுத்துவார்கள். மற்றவர்கள் முன்னிலையில் மதிப்பு உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய நண்பர்கள் உடைய வட்டத்தை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். வெளியிட போக்குவரத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைச் சமாளிக்க போராடுவீர்கள். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் பழைய சரக்குகள் விற்பனை ஆகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் கிடைக்கும். வியாபார ரீதியான பிரார்த்தனைகள் நிறைவேறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.