இன்றைய ராசிபலன் 5 நவம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேடிப்போய் உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் அமையும். தொட்டது துலங்கும் அற்புத நாளாக இருக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி உங்கள் கை ஓங்கியிருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உற்றார் உறவினர்களின் மூலம் அனுகூல பலன்கள் உண்டாகும். இதில் அவர்கள் நினைத்ததை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் குறையும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாக கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற அலைச்சலை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் கூடுமான வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பழைய சிக்கல் தீர கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களை மதித்து நடப்பது நல்லது. உழைப்பால் உயரக்கூடிய நல்ல நாளாக இருக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசி பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் பாதிப்புகள் குறையும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள்பேச்சாற்றல் மூலம் அனைவரையும் எளிதாக கவர்ந்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புதுமைகளை படைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். தேவையற்ற வாக்குவாதங்கள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் கண்டு உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் சீராகி வரும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் ஏற்ற இறக்கமான சூழ்நிலையில் இருப்பீர்கள். உங்கள் வரவுக்கு உரிய செலவுகளும் வந்து சேரும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். ஆரோக்யத்தில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் குடும்பத்தை பற்றிய பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெளிவட்டாரத்தில் நிதானத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத அலைச்சல் ஏற்படும்.

மகரம்:

உங்கள் ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் அனுகூலமான பலன்களை பெற போகிறீர்கள். தேவையற்ற கவலைகளை மனத்திலிருந்து நீக்கக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். எவ்வளவு தடைகளையும் தாண்டி முன்னேற கூடிய நாளாக அமைய இருக்கிறது.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் பணப்பற்றாக்குறையை சமாளிக்க கூடிய நல்ல நாளா தானே இருக்கிறது. கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். வருமான உயர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபடக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பொதுக் காரியங்கள் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் இருப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் மூலம் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வெளி வட்டாரப் போக்குவரத்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.