இன்றைய ராசிபலன் 3 நவம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் நிறைவேறும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகள் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அக்கறை அதிகரித்து காணப்படும். ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தவற்றுக்கு எதிர்மறையாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் உண்டு. உத்தியோத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகளில் கூடுதல் அக்கறையுடன் காணப்படுவீர்கள். தேவையற்ற வெளியிட பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களை கவரும் யுத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் தள்ளிப் போடாமல் உடனுக்குடன் முடித்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்வரும் தடைகளை சமாளிக்கும் தன்னம்பிக்கை இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவற்றில் எதிர்பார்த்த சில விஷயங்களில் ஏமாற்றம் பெற வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் வந்து மறையும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த அதிரடி மாற்றங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய அனுபவ ரீதியான பாடங்களை கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் குடும்பத்துடன் செலவிடும் நேரம் இல்லையே என்று யோசிப்பீர்கள். கணவன் மனைவி உறவு சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் நன்மைகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சவால்கள் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் மூலம் சில அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உடன் பிறந்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். வெளியிட பயணங்கள் மூலம் அலைச்சல் மற்றும் டென்ஷன் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு உங்கள் உழைப்பிற்கு உரிய பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த சுப காரிய தடைகள் விலகும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய சரக்குகளை கொள்முதல் செய்யும் வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு உரிய ஊதியம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம் எனவே டென்ஷன் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரிக்கும் என்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவேண்டிய பணம் வர வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு உறவினர்கள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்துணர்வு அதிகரித்து காணப்படும். உங்கள் மனதிலிருந்து அந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவான முடிவு பிறக்கும். வில் சுற்றியுள்ள பகைவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் உண்டாக வாய்ப்புகள் அமையும.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்புகள் உண்டு. வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும் என்பதால் கூடுமானவரை எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கடினமான வேலைகளை கூட எளிதாக முடிக்கும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் உண்டாகக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் யாரையும் நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள் ஆக அமைய இருக்கின்றது. தேவையற்ற வார்த்தைகளை விட்டுவிட்டுப் பின்னர் யோசிப்பதில் பிரயோஜனமில்லை. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.