இன்றைய ராசிபலன் 2 நவம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இறை பக்தி அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை பற்றிய விவாதங்களில் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் தேவையற்ற மனக் கசப்புகள். உண்டாகும் என்பதால் கவனம் தேவை.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட உள்ளவர்களுக்கு தேவையில்லாத வெளியிட பயணங்கள் அலைச்சல் உருவாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் பிரச்சனைகள் தீரும். தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் விஷயங்கள் நேர்மறையாக நடக்க எதிர்மறையாக நடக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பண ரீதியான விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. மூன்றாம் நபர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் நிதானம் தேவை. ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அதிகமாக இருக்கும். குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நிறைய முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராதபடி பணவரவு வருவதில் தடைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உங்கள் வேலைகளை செவ்வனே செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும் எனவே மனதில் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பேச்சில் நிதானம் தேவை தேவையற்ற வார்த்தைகளை வைத்து விட்டு பின்னர் யோசிப்பதில் பிரயோஜனம் இல்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொலை தூர இடங்களில் இருந்து சுப செய்திகள் கிடைக்கப் பெறும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க போராடுவீர்கள்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் நிதானம் தேவை. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிடக் கூடாது என்பதை நினைவில் கொண்டு செயல்படுவது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் பன்மடங்கு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. பெண்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் பணிகளில் மும்முரமாக செயல்படுவீர்கள். புதிய விதிகளை கையாண்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தி காட்டுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சுற்றியிருக்கும் போட்டியாளர்களை சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் வந்து மறையும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுதல் பொறுப்பு தேவை. தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய விரிவாக்கம் பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இறை வழிபாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் அமையும். நவீன வகை உபகரணங்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. தேவையற்ற நபர்களின் விமர்சனங்களை தவிர்த்துக் கொள்வது உத்தமம். சுயதொழில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும். இதனால் உடலில் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். பெண்களுக்கு வைராக்கியம் ஏற்படும். குழந்தைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும்.