இன்றைய ராசிபலன் 29 அக்டோபர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய மன நிலை சீரற்றதாக இருக்கும் என்பதால் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை விட நல்ல பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் நன்மதிப்பு உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் மறையும். இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் ஏற்படும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி அடைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருக்கும் நபர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபயோக வைபவங்கள் கைகூடிவரும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தடைபட்ட திருமண யோகம் கைகூடி வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சரியாக கணிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு கொடுத்தால் வெற்றி காணலாம். உத்தியோகத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கூடுதல் அக்கறை ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணப்புழக்கம் அதிகரித்து காணப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலை பற்றிய நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை பெறுவீர்கள்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமை கண்ணியம் என்று செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் நாணயமாக நடந்து கொள்வது நல்லது. கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் அமையும். பிள்ளை வழி சுப செய்தி உண்டு.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீண்ட நாளாக போராடிக் கொண்டிருக்கும் வேலைகள் எளிதாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனநிறைவு இருக்கும். புதிய விஷயங்களில் வெற்றி காண கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் நன்மைகள் உண்டாகும். நீங்கள் என்றோ செய்த உதவி இன்று உங்களுக்கு பலனாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்துக் காணப்படும். அரோகிய ரீதியான பாதிப்புகள் வந்து மறையும். விநாயகரை வழிபடுதல் நல்லது.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். பொருளாதார ரீதியான ஏற்றம் சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எடுக்கும் முடிவுகளை சற்று ஆலோசித்து எடுப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.