இன்றைய ராசிபலன் 28 அக்டோபர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிகம் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பது இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உடன் பிறந்தவர்கள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். நினைத்த காரியங்களில் வெற்றி அடைய போராடுவீர்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெளிவட்டார நட்பு வட்டம் விரியும். பெரிய மனிதர்களுடைய சந்திப்பு அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் போராடி அடையக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. சுலபமாக எதுவும் கிடைத்துவிடாது என்பதை அறிந்து சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அதற்குரிய உழைப்பை கொடுக்க வேண்டும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சில வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை பெறுவீர்கள். கணவன் மனைவி ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் அனுபவம் உங்களுக்கு சிறந்த பலன்களை கொடுக்கும் நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில ராஜ தந்திரங்களை கையாளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவதை தவிர்ப்பது நல்லது. புதிய யுத்திகளை கையாள்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத வீண் அலைச்சலை சந்திக்க நேரலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகன்று நல்லது நடக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேலை பளு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதால் சோர்வுடன் காணப்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே பனிப்போர் நடக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய முதலீடுகள் செய்ய கூடிய அற்புதமான வாய்ப்புகள் அமையும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் சில சங்கடங்கள் நேரலாம். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்ப்பது நல்லது. பண விஷயத்தில் கவனம் தேவை.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உடல் ஆரோக்கியா ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வெளியிட பயணங்களை தவிர்த்து கூடுமானவரை பாதுகாப்பாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் உண்டு. பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் தரும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கூடுமானவரை பொறுமை காப்பது நல்லது. தேவையற்ற வார்த்தைகள் சில இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிகம் உழைப்பை கொடுக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. சுயதொழிலில் அனைவருடைய ஒத்துழைப்பையும் பெற போராடுவீர்கள்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சிறுசிறு பாதிப்புகள் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு மறையும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டைகள் தீரும். இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் ஏற்படும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனம் தேவை. கூடுமான விழிப்புணர்வு இல்லை என்றால் தேவையற்ற இழப்புகளை சந்திக்க நேரிடும். சுயதொழிலில் பழைய நண்பர்களின் அறிமுகம் பயனுள்ள வகையில் உண்டாகும். உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகம் தேவை. எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.