இன்றைய ராசிபலன் 27 அக்டோபர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் நன்மைகள் நடக்கும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அனைவருடைய விருப்பங்களையும் நிறைவேற்றும் சந்தர்ப்பங்கள் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய சந்திப்பு உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் வீண் விரயங்கள் ஏற்படலாம். கூடுமான வரை வெளியிடங்களில் செல்லும்பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ விட்டு கொடுத்து செல்வது நல்லது.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்களை சுற்றி மகிழ்ச்சி காணப்படும். தேவையற்ற மனக் கசப்புகளை தூக்கி எறிந்துவிட்டு ஒற்றுமையுடன் இருப்பது நல்லது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தொலை தூர இடங்களிலிருந்து செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிலுவையில் இருந்த பணிகளையும் சேர்த்து செய்து முடித்து விடுவீர்கள்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்கள் நட்பு வட்டம் விரியும். குடும்பத் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உங்கள் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கப்பட நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்கள் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு திடீர் திருப்பங்கள் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தாங்கள் தங்களுடைய வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அடுத்தவர்கள் பிரச்சினைகளில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் திடீர் திருப்பம் நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிலும் கவனமுடன் முடிவு எடுப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் இரண்டு மனதாக இல்லாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பனிப்போர் நீங்கும். ஆரோக்கியம் பலம் ஆகும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து மறையும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பழைய சரக்குகளை விற்பனை செய்யும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் ஒருவர் மீது இருக்கும் கோபத்தை இன்னொருவர் மீது காண்பிப்பது தவறு.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கவனக்குறைவால் தேவையற்ற இழப்புக்களைச் சந்திக்க நேரலாம் என்பதால் கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பொறுமை தேவை உங்கள் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற செலவுகள் வந்து சேரும் என்பதால் கவனம் தேவை.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது நல்லது. பணிச்சுமை அதிகரித்தாலும் உங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்படுவீர்கள். சுயதொழிலில் தடைகளைத் தாண்டி முன்னேற கூறிய நல்ல நாளாகவே இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபகாரியத் தடைகள் விலகி சுபிட்சம் நிலவும் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் நீங்கள் மற்றவர்களுடைய நன்மதிப்பை சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் நன்மைகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு உங்கள் கை ஓங்கும் கூடிய அற்புதமான வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்திற்கு ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரியோர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும் . ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் குறையும்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்ட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத விதமாக பணவரவு இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியான ஏற்றம் காண்பதால் குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். புதிய பொருள் சேர்க்கை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.