இன்றைய ராசிபலன் 26 அக்டோபர் 2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் திடீர் முடிவுகளுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய பாதைகள் தென்படக்கூடிய அற்புத வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெரிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நயமாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற முன்கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இழுபறியாக இருந்த வேலைகளை இழுத்து போட்டு செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. வெளியீட பயணங்களின் போது கவனம் வேண்டும். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை அறிந்து செயல்பட நன்மைகள் நடக்கும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இடம் பொருள் பார்த்து நடந்து கொள்வது நல்லது. உங்கள் கவனக்குறைவு சில இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அனுசரணையான பேச்சு தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் அரசு வழியில் காரியங்களில் அனுகூல பலன் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் போராடி உங்கள் வேலைகளை கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் அனுபவபூர்வமாக நீங்கள் சில விஷயங்களை எதிர் கொள்வதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சமயோசிதமாக செயல்படுவதன் மூலம் ஏற்றம் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளில் உங்கள் பங்களிப்பை கொடுத்து மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவை பெறுவதற்கு முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உங்களுடைய திறமையை மற்றவர்களுக்கு வெளிக் கொணர வேண்டிய தருணமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் பல பிரச்சனைகளை சமாளிக்க முடியும். புகழ் அதிகரிக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அனுபவ பூர்வமான முடிவுகளை எடுப்பதில் ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களுடைய அறிமுகம் கிடைக்கும். எதையும் தாங்கக்கூடிய மனவலிமையை பெறுவீர்கள். நேர்மறையான சிந்தனை காணப்படும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய புதிய சிந்தனைகள் பல பரிணாமங்களில் வெளிப்படத் துவங்கும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்க செய்ய கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். தேவையற்ற கோபத்தை தவிர்த்து இனிமையான பேச்சாற்றல் மூலம் இன்றைய நாள் இனிமையாக கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகத்துடன் செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். சிலர் பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த ஊடல்கள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உங்களுடைய புதிய முயற்சிகளை விடாமுயற்சியுடன் செய்ய போராடுவீர்கள். எதிலும் நண்பர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. தேவையற்ற வம்பு வழக்குகளை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் திடீர் திருப்பங்கள் நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நவீன உபகரணங்களை வாங்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.