இன்றைய ராசி பலன் – 18-10-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு விருத்தி ஏற்படும். எதிர்பார்த்த அளவிற்கு லாபமும் இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு நண்பர்களுடன் சிறு சிறு மன கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெற்றோர் மற்றும் உறவினர்களின் வருகையால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களுடைய பழைய நினைவுகளை அசை போட்டு பார்ப்பீர்கள். வாகன ரீதியான பயணத்தின் கூடுதல் கவனத்துடன் இருப்பது மிகவும் நல்லது. கணவன் மனைவி இடையேயான சிக்கல்கள் நீங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படுவதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி ஆகும். எதிர்பாராத சமயத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரப் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். கடந்த கைகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் மாறும். சகோதரர் மற்றும் சகோதரி கலைக்கு இடையேயான மனக்கசப்புகள் நீங்கும். சக நண்பர்களுடன் மனதிற்கு பிடித்த விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் தரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கிரக நிலைகள் சிறப்பாக இருப்பதால் புதிய தொழில் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும் குடும்பத்தில் இருக்கும் நபரிடம் வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமையை கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் நல்லது நடக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் குறையும் வாய்ப்புகள் உண்டு.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். ஆடம்பரத்தை குறைத்து சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமுதாயத்தில் உங்களுக்கு இருந்து வந்த மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதிகம் இரக்க சுபாவம் உள்ள நீங்கள் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. முதலீடு செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்திப்பது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். தியானம் யோகா போன்றவற்றை முயற்சிப்பதன் மூலம் ஆரோக்கியம் பெறலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத நபர்களின் வருகையால் குதூகலத்துடன் குடும்பத்தில் அனைவரும் மகிழ்வார்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். பல விஷயங்களை கேட்கும்பொழுது புரியாத உங்களுக்கு இப்பொழுது பட்டு உணர்வீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவைப்படும் நாளாக இருக்கும். தலை மற்றும் கண்கள் போன்ற பகுதிகளில் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் நபர்களை அனுசரித்து செல்வதன் மூலம் மன அமைதி பெறலாம். தந்தைவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. பிள்ளைகள் தேவையற்ற சகவாசத்தால் பிரச்சினைகள் கொண்டு வருவார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனைகள் தீர வெளியிடங்களுக்கு சென்று வருவது நல்லது. ஆரோக்கியத்தில் சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு மறையும்.