இன்றைய ராசிபலன் (11 அக்டோபர் 2021)

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விசயங்களில் அதிரடி மாற்றங்கள் நிகழும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்கும். பிடித்தவர்களை சந்திப்பதற்கு வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கூட உயர் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. குடும்பச் சுமைகள் குறையும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய கனவுகள் நிறைவேறும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த போட்டி, பொறாமைகள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைய விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வருமான ரீதியான அனுகூலமான பலன்களை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஆதரவு கொடுப்பார்கள். குடும்பத்தில் அமைதி தேவை. ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தடைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. மனதிற்கு பிடித்தவர்கள் முதல் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் படிப்படியாக குறையும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாள் உங்களுடைய எண்ணங்கள் நேர்மறையாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய எதிர்பார்ப்புக்குரிய வருமானம் பெருகும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்றம் காணும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நடக்கும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அனுகூல பலன் கொடுக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் காண்பீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் படிப்படியாக சீராகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டியாளர்களை எதிர்க்கும் சூழ்நிலை ஏற்படும். ஆரோக்கியம் கவனம் தேவை.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற சாமர்த்தியம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நடக்கும் அற்புத நாளாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பும் அனுகூல பலன் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் நிலையில் சோர்வு காணப் பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஓய்வில்லாமல் உழைக்கும் கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கூறுதல் ஒத்துழைப்பு முன்னேற்றத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த குழப்பங்கள் தீரும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீவிர கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களை கவரும் எண்ணம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் அளவிற்கு வருமானம் உயரும். பதவி உயர்வு போன்றவற்றில் சாதகப் பலனை காண்பீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோக ரீதியான போக்குவரத்துகளில் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்கு இடையே நடந்து வந்த பனிப்போர் தீரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.