இன்றைய ராசிபலன் (9 அக்டோபர் 2021)

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். ஒரே நாளில் பல வேலைகளை முடிக்க கூடிய சூழ்நிலை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வீண் பழிகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாய் கூடுமானவரை விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. எதிலும் உங்களுக்கு கவனக்குறைவு மற்றும் மறதி ஏற்பட வாய்ப்புகள் உண்டு எனவே எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உழைப்பிற்கு உரிய பலனையும் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் வருமானம் பெருகும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் நினைத்தது பலிதமாகும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் குடும்பத்துடன் ஆலோசனை செய்து விட்டு பின்னர் எடுப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினருடைய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை இடையூறுகள் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு தடைகள் மற்றும் குழப்பங்கள் வர வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களிடம் பாராட்டுகள் பெறும் வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எவ்வளவு தடைகள் வந்தாலும் அவற்றை எதிர்த்து துணிவுடன் போராடும் தைரியம் பிறக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சுற்றியிருக்கும் எதிரிகளை முறியடிக்கும் வல்லமை பிறக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக நெருக்கடிகள் குறையும். கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் தீரும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய நட்பு வட்டம் விரிய கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற மன சங்கடங்கள் ஏற்பட்டு மறையும். கூடுமானவரை இன்றைய நாள் வாக்குவாதங்களை தவிர்த்து மன அமைதியுடன் இருப்பது நல்லது.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இன்றைய நாள் குழப்பங்கள் தீர்ந்து முடிவை எடுக்கும் தைரியம் உண்டாகும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுய முடிவு எடுப்பது நல்லது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த குழப்பங்கள் தீரும். ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய நபர்களின் அறிமுகம் படிக்கல்லாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக விஷயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நீல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டாகும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மறைமுக எதிர்ப்புகள் விலகி புதிய தன்னம்பிக்கை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களை சுற்றியுள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு மற்றவர்களுடைய இடையூறு இருக்கும். விடாப்பிடியான முயற்சி வெற்றியை கொடுக்கும். ஆரம்பத்தில் கவனம் செலுத்துங்கள்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்டு செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த வாக்குவாதங்கள் மேலும் வலுவாக என்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பணி சுமை டென்ஷனை உண்டாக்கும். ஆரோக்கியம் கவனம் தேவை.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கிய ரீதியாக முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிக லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி குறையும். உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூல பலன் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் காணும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் யோகம் உண்டு. கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் இருப்பதால் வீட்டில் இருப்பவர்களின் தேவைகளை கேட்டறிந்து எளிதாக பூர்த்தி செய்துவிடுவீர்கள். வெளியிடங்களில் கவனம் தேவை.