இன்றைய ராசிபலன் (6 அக்டோபர் 2021)

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய ஒத்துழைப்பு கூடுதலாக கொடுப்பது முன்னேற்றத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் பிரச்சனைகள் குறித்த கவலை மேலோங்கி காணப்படும். பெண்கள் உங்களுடைய முழு முயற்சியை கொடுக்கும் பொழுது தான் பலன்களையும் இன்று பெற முடியும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்களை சமாளிக்கும் தைரியம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மாற்று துறையில் இருப்பவர்கள் உடைய ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை மேலும் பலப்படும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் சற்று ஆழமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். தேவையற்ற மன சஞ்சலங்கள் நீங்கி தெளிவான முடிவை எடுக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்தவர்களுக்கு அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் அதிக நாட்டம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு குறித்த விஷயங்களில் சாதகப்பலன் உண்டாகும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் மறைய சந்தர்ப்பங்கள் அமையும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அனுகூலமான பலன்களைக் கொடுக்கும் நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய தைரியம் தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியான முயற்சிகளால் எதிர்பாராத அதிர்ஷ்டம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துவது நல்லது.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்களில் எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நேர்மறை சிந்தனைகள் இருந்தால் வெற்றி உங்கள் பக்கம். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டகால பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்க நினைக்கும் ஒவ்வொரு அடியிலும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பேச்சுவார்த்தைகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் திறமையை பார்த்து மற்றவர்கள் பாராட்டும்படி சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியம் கவனம் தேவை.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்களைக் கொடுக்கக் கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் நீண்டநாள் எதிர்பார்த்த விஷயம் ஒன்று நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ஆரோக்கியம் படிப்படியாக முன்னேறும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர்மறையான சிந்தனையுடனும் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். புதிய நட்பு வட்டம் விரியும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துவது நல்லது.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் வருவது வரட்டும் என்று விட்டுவிட்டு தங்கள் வேலையில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களை சுற்றி இருக்கும் பகைவர்களும் சூழ்ச்சியை முறியடித்து வெற்றி காண்பீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை நீக்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமை மற்றவர்களுக்கு தெரியக் கூடிய வகையிலான சூழ்நிலை உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ஏற்றம் காரணமாக குடும்ப தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பு மேலும் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்கி சேர்ப்பீர்கள். உணவு கட்டுப்பாடு மேற்கொண்டால் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கலாம்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் ஆதரவை பெற்று வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் தொலை தூர இடங்களில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.