இன்றைய ராசிபலன் (3 அக்டோபர் 2021)

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்கள் மூலம் அனுகூல பலன்களைப் பெறும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட சிறந்த லாப பலன்களை கொண்டிருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட திடீர் அதிர்ஷ்டம் வரும். சுபகாரியத் தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். உற்றார், உறவினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் தடைகளை சந்திக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரிய தொகையை ஈடுபடுத்தும் போது கவனம் செலுத்த வேண்டும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் புதிய முடிவுகள் அனுகூல பலன் கொடுக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது நிறைவேற கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் தன லாபம் பெறலாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் கூட உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். ஆரோக்கியம் சீராகும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் மனதில் விரும்பிய செயல் ஒன்று நடக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கூடுதல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. பண ரீதியான விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் அனுகூல பலன் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் இணக்கத்துடன் செல்வது நல்லது. கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இறைவழிபாடுகள் மூலம் இனிய செய்திகள் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சமூகத்தின் மீதான கண்ணோட்டத்தை மாற்றி அமைப்பீர்கள். கூடுதல் பொறுப்புணர்வை ஏற்படும் நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்கள் இந்த நாள் அனுகூல பலன் கொடுக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புத வாய்ப்புகளை பெறுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை அமையும். குடும்பத்தில் தடைப்பட்ட சில வேலைகள் முடிவுக்கு வரும். புதிய வீடு கட்டும் பணிகளில் அனுகூல பலன் பெறலாம்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு எதிலும் ஏற்றம் காண கூடிய அற்புத அமைப்பாக இருக்கிறது. வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன் பெறலாம். குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய வகையில் அமைப்பு இருப்பதால் உத்யோகஸ்தர்களுக்கு மனமகிழ்வு ஏற்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். எந்த ஒரு முடிவையும் சுயமாக எடுப்பது சிறந்த பலனை கொடுக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிலும் அமைதி தேவை. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிறைவு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் காணலாம். ஆரோக்கியத்திற்கு கூடுதலாக அக்கறை செலுத்துவது நல்லது.