இன்றைய ராசிபலன் 30 செப்டம்பர் 2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் தடைப்பட்டுக் கொண்டிருந்த சில விஷயங்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை நடத்திக் காட்டும் தன்னம்பிக்கை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை தகர்த்து எறிந்து வெற்றி பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் அனுசரிப்பு தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை ஒத்தி வைப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய சிந்தனைகள் பிறக்கும். உங்கள் திறமைக்கு உரிய பாராட்டுகளைப் பெறுவீர்கள். பழைய கடன் பாக்கிகள் வசூல் ஆகும் யோகம் உண்டு. விட்டு சென்றவர்கள் வந்து சேருவார்கள். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சமயோசிதமாக செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த போட்டிகள் குறையும். உங்கள் திறமையை வெளிக்கொணரும் அற்புத நாளாக இருக்கும். நண்பர்களின் நட்பு வட்டம் விரியும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியிட பயணங்களின் போது கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் உங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்று இருப்பது உத்தியோகஸ்தர்களுக்கு நன்மைகளை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு சுய சிந்தனை அதிகரிக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்களுடைய சாதுர்யமான திறமையால் பல விஷயங்களை வென்று காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் கரிசனம் கிடைக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதும், விரும்பிய விஷயங்களை கற்றுக் கொள்வதும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் விரும்பியதை அடைய கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். கிடைக்கும் வாய்ப்புகளை பற்றிக் கொண்டால் வெற்றி காணலாம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் செய்யும் அவசர விஷயங்களால் சில இழப்புகளை சந்திக்க நேரலாம் எனவே கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அனுகூலமான பலன் உண்டாகும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை அடைந்து காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை செய்து காட்டக் கூடிய அற்புதமான அமைப்பு உண்டு தொட்டதெல்லாம் துலங்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு சீராக இருக்கும். பெண்களுக்கு தைரியம் அதிகரிக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை எதிர்த்தவர்கள் கூட பணிந்து செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பகைவர்களும் நண்பர்களாக மாற கூட வாய்ப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை எளிதாக சமாளித்து ஒற்றுமையை பேணி காப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வருபவர்களுக்கு நிறைய லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வம்பு வழக்குகளில் சாதகமான சூழ்நிலை என்பதால் அமைதி காப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்பட்டு வரும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்யும் அற்புத நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட பன்மடங்கு லாபம் பெருகும். புதிய முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்களின் மூலம் லாபம் உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மைகளை கொடுக்கும்.