இன்றைய ராசிபலன் (15 செப்டம்பர் 2021)

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை நடத்தி காட்டுவீர்கள். குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய முன்னேற்றம் சிறப்பாக இருக்க போகிறது. கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மூன்றாம் மனிதர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற மனக்குழப்பங்களை நீக்கி உங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்று இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடும் யோகம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மென்மேலும் உயரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி பிரச்சனைகள் தீர்ந்து அன்பு அதிகரிக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதற்கெடுத்தாலும் முன்கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கூட மனம் மாறி விடும் வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறைய கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியை காணப் போகிறீர்கள். இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த சில விஷயங்கள் கூட முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதம் நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. வேண்டாம் என்று நினைத்தவர்கள் கூட வேண்டும் என்று வேண்டி வந்து நிற்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மனதிலிருக்கும் பாரம் குறைந்து தெளிவான முடிவு எடுக்கும் தைரியம் பிறக்கும். கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வது நல்லது.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியிட பயணங்களின் போது கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வம்பு வழக்குகள் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவு வரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூல பலன் பெறுவீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகையால் குதூகலம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சூட்சுமங்களை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுறுசுறுப்பாக உங்களுடைய பணிகளை செய்து முடித்துக் காட்டுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவாலான காரியங்களைக் கூட சுலபமாக செய்து காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களுடைய நேர்மை மற்றும் நாணயத்தால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய பகைவர்களின் தொல்லை ஒழியும். வேலை பளு அதிகரிப்பதால் மனதில் டென்ஷனும், குழப்பமும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் விழிப்புணர்வு தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் தைரியமாக முடிவெடுக்கும் திறன் உண்டாகும். நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையப் பெறும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் வருமானம் ரீதியான அனுகூலப் பலனைப் பெறப் போகிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் வட்டம் விரியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. திட்டமிட்ட காரியங்களையும் சிறப்பாக செய்து காட்டுவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் லாபம் பெருகும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் முடிவுகளை நினைத்து வருத்தப்படக் கூடிய சூழ்நிலை உருவாகும் என்பதால் கூடுமானவரை சாதுரியமாக செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பண விஷயங்களில் கறாராக இருப்பது நல்லது. உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். பேச்சில் இனிமையும், செயலில் சுறுசுறுப்பு இருந்தால் வெற்றி நிச்சயம்.