இன்றைய ராசிபலன் (14 செப்டம்பர் 2021)

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற போக்குவரத்துகளை தவிர்ப்பது உத்தமம். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்த அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைந்திருக்கிறது. எதிர்பார்க்கும் பணவரவு எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வருமானம் பெருகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும். விநாயகரை துதியுங்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் அடையக் கூடிய வாய்ப்புகள் அமைந்துள்ளது. நடக்காது என்று நினைத்த காரியங்கள் கைகூடி வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தொலை தூர பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பண ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர் பார்க்காத விஷயங்கள் எல்லாம் நடக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மற்றவர்களுடைய பேச்சுகளை கவனத்தில் கொள்ளாமல் உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதனை செய்வது நல்லது. கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் சீராகும்

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை விட அதிர்ஷ்டம் அதிகம் உண்டாகும். கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்க வேண்டிய விஷயங்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வருமான ரீதியான பிரச்சனைகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. துர்க்கை அம்மன் வழிபாடு செய்யுங்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் முகத்தில் புத்துணர்வு தென்படும். எதையோ சாதித்தது போன்ற உணர்வு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதக பலனை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொலைதூரப் பயணங்கள் மூலம் அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாக விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய ரீதியான வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் கவனம் தேவை.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றியை காண கூடிய யோகம் உண்டு. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடி வரும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் பண வரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்கள் புது அனுபவத்தை கொடுக்கும். கணவன் மனைவி பிரச்சினைகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று வேளையில் மட்டும் கவனத்துடன் இருப்பது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைந்து நிம்மதி பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்ட லாபத்தை மீண்டும் மீட்டு எடுக்கலாம். ஆரோக்கியம் கவனியுங்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் குழப்பம் நீடித்து காணப்படும். எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்கும் முன் பலமுறை ஆலோசனை செய்து விட்டு பின்னர் எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூல பலன் உண்டாகும். முயற்சிகள் வெற்றி தரும் வகையில் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற தடை தாமதங்கள் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் தோன்றி மறையும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் உடைய ஆதரவை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வருபவர்களுக்கு புதிய முயற்சிகளுக்கு உரிய பலன்களை பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தடைகளைத் தாண்டிய வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இவரை ஒருவர் சொல் கேட்டு விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூல பலன் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்கள் மனதிற்கு புத்துணர்வை கொடுக்கும். சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கற்றுக்கொள்ள ஆசைப்படும் விஷயங்களைக் கற்றுத் தேர்வதற்கு வாய்ப்புகள் அமையும்.