இன்றைய ராசிபலன் 28.08.2021

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வருத்தப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும் அலுவலக ரகசியங்களை வெளியிடவேண்டாம். பேச்சியில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்கள் நிறைவேறும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

கடகம்

கடகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். நெருங்கியவர்களுக்காக சிலரது உதவியை நாடுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதித்துக் காட்டும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தொழிலில் திருப்தி உண்டாகும். உத்தியோகத்தில் மன அமைதி ஏற்படும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் வரக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். விட்டுக்கொடுக்க வேண்டிய நாள்.

 

துலாம்

துலாம்: கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் ரசிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

தனுசு: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

 

மகரம்

மகரம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம்வந்து போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்

கும்பம்: உங்கள் பேச்சில் அனுபவங்கள் உதவியாக இருக்கும்அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.மனைவி வழியில்ஆதரவு பெருகும். சொத்துப் பிரச்சினைகள் தீரும். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்

மீனம்: இதுவரை இருந்த டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். பழைய கடன் பிரச்சினை கள் கட்டுப்பாட்டிற்குள் வரும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்தநாள்.