இன்றைய ராசிப்பலன் – 26-8-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு சாதகமான பலன்கள் அமைவதில் இடையூறுகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு செயலையும் நிதானமாக செய்வது உத்தமம். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி தேவை.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான நடவடிக்கைகள் மூலம் சில சாதகமான பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய யுக்தியை மற்றவர்கள் கடைபிடிக்க துவங்குவார்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று சில சமயங்களில் நீங்கள் வருத்தப்பட நேரிடும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதி தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் அதிர்ஷ்டமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு உங்களுடைய பங்குதாரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கேலி மற்றும் விமர்சனங்கள் உண்டாகும். தேவையற்ற இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளவும். பொருளாதாரம் மேம்படும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கடமை உணர்வு அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய மதிப்பும் மரியாதையும் உயரும். சமூகத்தின் மீதான பார்வை உங்களுக்கு மாறுபடும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு மற்றவர்களுடைய ஆலோசனை கட்டாயம் தேவைப்படும். பெரிய மனிதர்களுடைய ஆதரவைப் பெறுவீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மனக் கவலைகள் நீங்கி முன்னேறக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் கூடுமான வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வது நல்லது. பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சில முக்கிய பொறுப்புகளை மூன்றாம் நபர்களை நம்பி ஒப்படைப்பதை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய நீண்ட நாள் கடன்கள் படிப்படியாக அடையும் யோகம் உண்டு. திடீரென உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு செயலையும் துணிச்சலுடன் முடிவெடுத்து செயல்படுத்தி காட்டுவீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வீடு வாகனம் போன்றவற்றின் மூலம் தேவையற்ற விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கும். பரஸ்பர ஒற்றுமை மேலோங்கி காணப்படும். ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் வருகை மனதிற்கு உற்சாகத்தை வரவழைக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் குறையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் போராடி பெற வேண்டி இருக்கும். சக போட்டியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகப் பலன் பெறுவீர்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு செயலையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் மற்றும் டென்சன் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது வரை இருந்து வந்த பகை நிலை மாறும். உங்கள் மீது ஏற்பட்டிருந்த வீண்பழி நீங்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்ள முயற்சி செய்வீர்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய இனிய நாளாக அமைய இருக்கிறது. எதிலும் கவனக்குறைவு ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில்முறை போட்டி பொறாமைகள் குறையும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய எண்ணங்களுக்கு ஏற்ப பலனும் அமையும். சுபகாரியத் தடைகள் விலகும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய மாற்றங்கள் மற்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். விட்டுச் சென்ற உறவுகள் தானாகவே வந்து சேருவார்கள். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும்.