இன்றைய ராசிப்பலன் – 25-8-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுப்பது நிம்மதிக்கு வழிவகுக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய கனவுகள் நிறைவேறும். உயரதிகாரிகளிடம் இணக்கத்துடன் செல்வது நல்லது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுபவம் உங்களுக்கு சிறந்த படிப்பினையை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அறிவுபூர்வமாக செயல்பட்டு மற்றவர்களுடைய பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் தடைபட்ட சில விஷயங்கள் முடிவுக்கு வரும். பெண்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவீர்கள். குடும்ப பொறுப்புகளை சுமப்பதில் சோர்வு ஏற்படும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய கடமை உணர்வு மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் தர்மசங்கடத்தில் முடிய வாய்ப்புகள் உண்டு. எதையும் பல முறை யோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வருவது வரட்டும் என்று அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தக விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். சுற்றி இருப்பவர்களைப் பற்றிய புரிந்துணர்வு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்துக் அதில் கவனத்துடன் இருப்பது உத்தமம்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்களுடைய வார்த்தைகளைத் பெருமளவு மதிப்பு உண்டாகும். நீண்டநாள் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வர செய்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்ட உள்ளவர்களுக்கு அமைதி தேவை. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு டென்ஷன் இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று செயல்படுவீர்கள். இதுவரை உங்களுக்கு இல்லாத ஒரு தெளிவு புதிதாக பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவார்கள். தொழில் துவங்குபவர்கள் முன்னேற்றத்திற்கான ஏற்றத்தை காணும் யோகம் உண்டு.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்ப்புகள் அனைத்தும் விலகி நன்மைகள் நடைபெறும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிரடியான லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தடைகள் விலகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் எனவே கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் புதிய மனிதர்களின் அறிமுகத்தை தவிர்ப்பது நல்லது. மூன்றாம் மனிதர்களிடமிருந்து கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் இடத்தில் அதிருப்தி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பழைய சரக்குகள் விற்பனையாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து கவனமாக இருப்பது நல்லது. நெருங்கியவர்களுக்கு கூட ஜாமீன் கையெழுத்து போடுவதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் சக போட்டியாளர்கள் உடன் இணக்கம் ஏற்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போராட்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எதையும் போராடித்தான் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த வேலையையும் அலைச்சலுடன் செய்ய வேண்டிய சூழ்நிலை நிலவும். பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்கள் திறம்பட சமாளிப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் சாதகப் பலனை காண்பீர்கள். தடைப்பட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மன சங்கடங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.