இன்றைய ராசிப்பலன் – 23-8-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்த வீடு கனவு குறித்த எண்ணம் மேலோங்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இதுவரை இருந்துவந்த பகலில் ஒழியும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களுடைய நம்பிக்கையை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். வெளிநாடு, வெளியூர் தொடர்பான விஷயங்களில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திட்டமிட்டு செய்த காரியங்கள் சில திசைமாறிப் போகும் அபாயம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடத்திலிருந்து கிடைக்க வேண்டிய தொகை பெறுவதில் காலதாமதம் ஏற்படலாம். நண்பர்களுடைய உதவிக்கரம் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தட்டிப் போகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். சமூகத்தின் மீதான அக்கறை மேலோங்கி காணப்படும். நடக்காது என்று நினைத்த காரியம் கூட கைகூடிவரும் அதிர்ஷ்டம் உண்டு.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சலுடன் செயல்படக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கடன் சுமை குறையும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் வம்பு வழக்குகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு, எனவே கூடுமானவரை விழிப்புணர்வு தேவை. தடைப்பட்ட சில காரியங்களில் கூடுதல் முயற்சி செய்தால் வெற்றி காணும் யோகமுண்டு. ஒரு சிலர் வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களுக்கு கட்டுபட்டு இருப்பீர்கள். சுய முடிவு எடுக்க முடியாமல் தவிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த சேமிப்பு கூட கரையும். வீண் விரயங்களை தவிர்ப்பது உத்தமம். நன் மற்றவர்களுக்கு நல்லது செய்யப் போய் அது உங்களுக்கு பாதகமாக முடியும் வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடமை உணர்வு அதிகரித்து காணப்படும். வாகன ரீதியான வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு விலகிச்சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணையும் யோகமுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உதாசீனப்படுத்திய போட்டியாளர்கள் முன்பு கம்பீரமாக சாதித்துக் காட்டும் நாளாக இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகளை நினைத்து கவலை கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றத்தை நோக்கி வீர நடை போடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டு. எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொருட்கள் சேரும். சொத்துக்கள் வாங்கும் திட்டமிடல் அனுகூலமான பலன்களை தரும். பொருளாதாரத்தில் இருந்து வந்த தளர்வு மீண்டும் சீராகும். பழைய நண்பர்களை சந்திக்கும் யோகமுண்டு. விநாயகர் வழிபாடு செய்யுங்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் கூடுதல் பொறுப்பு சுமை ஏற்படும். பெரிய மனிதர்களுடைய அனுகிரகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆரோக்கியம் சீராகும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் மற்றவர்களின் பாசமழை உங்கள் மீது பொழியும். சுபகாரிய விசேஷங்களில் கலந்து கொள்ளும் யோகமுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு உதவிய சிலரை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் துவங்குவது குறித்த விஷயங்களில் சாதக பலன் உண்டு.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சுற்றியிருந்த பகைவர்களுடைய சூழ்ச்சியை முறியடிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தை ஏற்றுக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகத்துடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்களைப் பற்றிய மற்றவர்களுடைய சிந்தனை மாற்று காட்டுவீர்கள். உங்களுடைய இரக்க சுபாவத்தை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் எனவே கவனம் தேவை.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் பொன்னாகும் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு ஒற்றுமை மேலோங்கி காணப்படும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வம்பு வழக்குகள் சாதகப் பலன் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய எதிர்ப்புகள் கூடிய விரைவில் மற்றவர்களுக்கு புரியும். பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.