இன்றைய ராசிப்பலன் – 22-8-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த சில விஷயங்களுக்கு அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பொறுமைக்கு உரிய மதிப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் அவ்வபோது வந்து செல்லும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சமாளிக்கும் மனதிடம் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரம் உங்கள் பக்கம் ஓங்கி இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கடும் முயற்சியால் நல்ல பலன்களை காணலாம். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தடைகள் விலகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னோன்யம் நிலைக்கும். குடும்ப ஒற்றுமையில் குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிக்கலான சில விஷயங்களை எதிர் கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நேர்மறை சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடினமான வேலைகளை கூட சுலபமாக செய்து முடிக்கக் கூடிய அற்புதமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுமை அதிகம் தேவைப்படும் நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் காணலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்களுடைய குடும்ப தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நெருங்கியவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலம் உண்டு.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் கடமை தவறாமல் செயல்பட வேண்டும் என்கிற உத்வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட்டாலும் கூடுதல் விழிப்புணர்வு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிடும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமையும். குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை சாதிக்க கூடிய வல்லமை பிறக்கும். எவ்வளவு தடைகள் இருந்தாலும் அவற்றை எதிர்த்து முன்னேறிக் கொண்டே செல்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து ஒற்றுமைக்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பகைகள் ஒழியும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தீட்டிய திட்டங்களுக்கு ஏற்ப சூழ்நிலையும் சாதகமாக அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் பலன் தரும் வகையில் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் சிக்கணத்துடன் இருப்பது நல்லது. பெண்கள் புதுமையை விரும்பும் அற்புதம் இது நடக்கும். சமயோசிதமாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். உறவினர்களின் வருகை மனதிற்கு உற்சாகத்தை தரும் வகையில் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் நினைத்த சில விஷயங்களுக்கு நல்ல முடிவு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது தானாகவே கைக்கு வந்து சேரும். புதிய வீட்டில் இருப்பவர்கள் உடைய மன நிலை சிறப்பாக இருக்கும். மற்றவர்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான சில விஷயங்களை செய்து கொடுப்பீர்கள். ஆரோக்கியம் முன்னேற்றமடையும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் உண்டாகும். பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளிப்பீர்கள். காரிய தடைகள் விலகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட நீண்டநாள் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய பேச்சுவார்த்தையில் இனிமை இருக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் நண்பர்கள் சந்திக்கும் யோகம் உண்டு. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனக் கவலைகள் அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் முன்னேறும். விநாயகரை வழிபடுவது நல்லது.