இன்றைய ராசிப்பலன் – 20-8-2021

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து அதற்குரிய பலன்களையும் பெறுவீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை உண்டாக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து பரஸ்பர ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுயதொழில் புரிபவர்கள் இன்றைய நாளில் அடுத்தவர்களை நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைப்பதில் கவனம் செலுத்துங்கள். பொருளாதாரம் முன்னேற்றம் அடையும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். தடைப்பட்ட சுப யோக முயற்சிகளுக்கு வெற்றி காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் தள்ளி சென்ற சில செயல்கள் முடிவுக்கு வரும். சுயதொழில் புரிபவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். சில இழப்புகளை சந்திக்க நேரலாம் எனவே விழிப்புணர்வு தேவை.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருந்து வந்த தடைகள் விலகும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றியைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய புத்துணர்வு ஏற்படும். எதையும் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை வளரும். சுய தொழில் புரிபவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். முக்கிய பொறுப்புகளை பெண்கள் சரியாக செய்து முடிப்பார்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்ய நினைக்கும் சில விஷயங்களை செய்து முடிக்கும் முன் மற்றவர்கள் செய்து விடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் இருப்பவர்கள் எதிலும் விழிப்புணர்வுடன் கவனமாக இருப்பது நல்லது. உடனிருப்பவர்களே துரோகம் செய்ய வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. பொருளாதாரத்தில் ஏற்றம் காணலாம்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று சகோதர, சகோதரிகளின் வழியே அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். நீண்டநாள் நினைத்த சில விஷயங்களுக்கு முடிவு கிடைக்கும். உங்கள் திறமைக்கு உரிய பலன்கள் கிடைக்க போகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் விஷயங்களுக்கு நேர்மறை பலன்கள் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் இறை சிந்தனை மேலோங்கி காணப்படும். நீண்ட நாள் சந்திக்க வேண்டிய நபர் ஒருவரை சந்திப்பீர்கள். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் தடைகளை தகர்த்து எறியும் தைரியம் பிறக்கும். சுயதொழிலில் உங்களை சுற்றி இருந்த பகைவர்களின் பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். மனதில் நினைத்த காரியம் ஒன்று நடக்க இருக்கிறது. வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை. ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்மைகள் நடக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தீரும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் நீண்டநாள் கனவுகள் நிறைவேற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பொருளாதர அபிவிருத்தி உண்டு.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் நீங்கும். சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் காணலாம். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் காண இருக்கிறீர்கள். பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளிப்பீர்கள்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு நினைத்தது நடக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும். குடும்பத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கப் பெறும். கணவன்-மனைவி பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்தது நடக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டு முடிவெடுப்பது நல்லது. புதிய தொழில் முயற்சிகள் அனுகூல பலனை அளிக்கும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் ஜாதக பலன் காண இருக்கிறீர்கள். சுபகாரியத் தடைகள் விலகி நல்ல வரன் அமையும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் காண்பீர்கள்.