இன்றைய ராசிப்பலன் – 19-8-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு புதிய சிந்தனை பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. பொருளாதாரம் மேம்படும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஏமாற்றம் உண்டாகும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நேர்மறையான அணுகுமுறை முன்னேற்றத்தை கொடுக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத சில நல்ல விஷயங்கள் அனுகூலம் தரும் வகையில் நடக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமை மேலோங்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய பாதை பிறக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகரித்து காணப்படும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். பொருளாதாரம் சீராக இருக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் மேலும் உயரும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு பின் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில மாற்றங்கள் வெறுப்பை ஏற்படுத்தும். மற்றவர்களுடைய ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். பொருளாதாரம் படிப்படியான முன்னேற்றம் பெறும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய விஷயங்களை போட்டு மனதில் அலட்டிக் கொள்ள வேண்டாம். நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுங்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆன்மீக ரீதியான நாட்டம் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் குடும்பத்தினருடைய ஆலோசனையை கேட்டு முடிவெடுப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திட்டமிட்டபடி எல்லா விஷயங்களும் நிறைவேறும் அற்புதமான நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சலாக சில விஷயங்களை செய்து சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கத்தி இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை நீங்கும். வைக்கம் புதிய வாய்ப்புகளை தவற விட்டால் மீண்டும் வாய்ப்புகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம் எனவே கவனம் தேவை. வெளியிட பயணங்களில் கவனம் தேவை.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத சில நல்ல முடிவுகள் மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சலாக சில முடிவுகள் எடுக்கும் சூழ்நிலை ஏற்படும். எடுக்கும் முடிவு சாதகமாக அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய சந்திப்புகள் அனுகூலமான பலன்களை கொடுக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதிலிருக்கும் குழப்பங்கள் நீங்கி புதிய முடிவுகளை எடுக்கக்கூடிய தைரியம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விடுவதில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். திடீர் பயணங்கள் மூலம் தேவையில்லாத அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வீண் விரயங்கள் வராமல் இருக்க ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதையும் சாமர்த்தியமாக செய்யக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தட்டி சென்ற வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள் தீரும். வாகன ரீதியான வீண்விரையம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வு தேவை.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் ஒற்றுமைக்கு சில கண் திருஷ்டிகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய நவீனகரமான உபகரணங்களை வாங்கும் யோகம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொலைதூரப் பயணங்களின் பொழுது பெரிய மனிதர்களுடைய அறிமுகம் கிடைக்கும். பொருளாதார ஏற்றம் காண்பீர்கள். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டிய தைரியம் பிறக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது வரை இருந்து வந்த பகை நிலை மாறும். பகைவர்களும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் கடன் பிரச்சினைகள் தீரும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.