இன்றைய ராசிப்பலன் – 18-8-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. தொழில் மற்றும் வியாபார ரீதியான வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகரித்து காணப்படும். குடும்ப தேவைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய உத்வேகம் பிறக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் பிரச்சனைகள் தீரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது வரை மனதில் இருந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் அளவிலான வருமானம் பெருகும். கூட்டாளிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்க முயற்சி செய்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சில மாற்றங்கள் உற்சாகத்தை அளிக்கும். கிடைக்க வேண்டிய இடங்களில் இருந்து கிடைக்க வேண்டிய விஷயங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரிய தடைகள் விலகும். மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. ஆரோக்கியம் சீராகும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். மந்த நிலை மாறி முன்னேற்றம் அடையும். கணவன் மனைவி இடையே இருக்கும் பரஸ்பர அன்பு அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் நல்ல சூழ்நிலையில் அமர்ந்து மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் கடமையை செய்து பலனை எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் அமைதி இருக்கும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்துகளில் சற்று கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாள் சந்திக்க நினைத்த ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகளை பெறுவீர்கள். உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது ஆரோக்கியம் சீராக இருக்க உதவும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் ஒரு விதமான புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நம்மால் எதையும் செய்து காட்ட முடியும் என்கிற வைராக்கியம் பிறக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சில விஷயங்களை புதிதாக மேற்கொண்டு அதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சில மறக்க நினைக்கும் விஷயங்களை மறக்க முடியாமல் தவிப்பீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் நேர்மறையாக நடக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் இருந்தாலும் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் எச்சரிக்கை தேவை.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயலாற்றுவதே உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களில் எச்சரிக்கை தேவை. பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைய வாய்ப்புகள் உண்டு. எந்த விஷயத்தை நினைத்து போராடுகிறீர்களோ அந்த விஷயத்தை கையாளும் நுணுக்கத்தை கற்றுக் கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உறவு சிக்கல் நீங்கும். நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்ட கூடிய நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைத்து உற்சாகம் நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனைகள் தீரும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும் யோகம் உண்டு. பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் அனுசரித்து விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் சஞ்சலம் இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்னர் ஆலோசனையும் செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டிகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. ஆரோக்கியம் பலப்படும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான அமைப்பு என்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது நல்லது. இதுவரை நிலவிவந்த போட்டிகள் குறையும். மேலான முன்னேற்றத்தை காண புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆரோக்கியம் சீராகி வரும்.