இன்றைய ராசிப்பலன் – 17-8-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும். எதையும் நிதானத்துடன் கையாளுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஆச்சரியத்தை வரவழைக்கும். உடனிருப்பவர்கள் உடைய ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் சந்தேகம் மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கி மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறைய தகுந்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடினமான காரியங்களைக் கூட எளிதாக முடியக் கூடிய அற்புதமான வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் பணம் வந்து சேர கால தாமதம் ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற போராட வேண்டி இருக்கும். கூடுதல் பொறுப்பு சுமை டென்ஷனை ஏற்படுத்தும். சகோதர சகோதரிகளுக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுவது உத்தமம். எந்த ஒரு விஷயத்திலும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பழக்க வழக்கங்களில் அளவாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து மௌனம் காப்பது நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கை ஓங்கி இருக்கும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முயற்சிகளில் ஆடம்பர செலவுகளை தவிர்த்து கொள்வது உத்தமம். பெண்கள் நீங்கள் நினைத்தது நடக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்தியோக ரீதியான விஷயங்களில் உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஆதரவு மற்றவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எத்தனை தடைகள் வந்தாலும் அதனை சுலபமாக தகர்த்தெறிந்து வீர நடைபோட்டு காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையேயான கருத்து மோதல்கள் நீங்க பொறுமை காப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை நினைத்தபடியே முடித்துக் காட்டுவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுபமாக முடியும். குடும்பத்தில் அமைதி நிலவ கூடுமானவரை முன்கோபத்தை தவிர்த்து பொறுமை காப்பது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு முடிவெடுப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தளராத மனம் கொண்ட உங்களுக்கு எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை நீக்கக் கூடிய வல்லமை உண்டாகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுபவம் சார்ந்த சில நல்ல முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். கணவன் மனைவி சண்டை சச்சரவில் மூன்றாம் மனிதர்களை தலையிடாமல் செய்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நட்பு கிடைக்காதா என்று பலரும் ஏங்குவார்கள். எப்போதும் கலகலப்புடன் இருக்கும் நீங்கள் இன்று மனம் உடைந்து போய் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய அதிகாரத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடந்து கொள்வார்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் பரஸ்பர அன்பு நீடிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்க பெறுவீர்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும். மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்கும். அறிவியல் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதையும் சிந்தித்து செயலாற்றுவதே உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிலர் நயவஞ்சக செயலால் பகையை வளர்ப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டால் சில இழப்புகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு எனவே கூடுமானவரை விழிப்புணர்வு தேவை. ஆரோக்கியம் சீராகி வரும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திட்டமிட்டு செயல்பட வேண்டிய சில விஷயங்களில் கால தாமதம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுற்றி இருப்பவர்கள், சக ஊழியர்கள் உடைய பிரச்சனைகளை கேட்டறிந்த அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் வீண் விரயம் ஆகாமல் இருக்கும்.