இன்றைய ராசிப்பலன் – 16-8-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய பாதைகள் தென்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் கவலைகள் மறையும். குடும்ப தலைவிகளுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சுபகாரியத் தடை நீங்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நினைத்ததை சாதிக்க இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக சென்று தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி இடையே பரஸ்பர அன்பு நீடிக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. வியாபாரத்தில் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரிய மனிதர்களின் சந்திப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் பணிச்சுமையை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. ஆரோக்கியம் படிப்படியான முன்னேற்றம் காணும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவ கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகளை வசூல் செய்யும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் அமையும். பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எளிதில் கவரக்கூடிய நல்ல நாளாக அமைகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நவீன உபகரணங்களை வாங்கும் யோகம் உண்டு. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பனிப்போர் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் யோகமுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். இதுவரை இருந்து வந்த பகைகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் அது ஒன்றாகவும் நடக்கும். எதையும் கவனத்துடன் சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. சுப காரிய தடைகள் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பகைவர்களின் தொல்லை மேலோங்கி காணப்படும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கர்மவினை தொடரும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை படிப்படியான மாற்றம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து மோதல்கள் நீங்க மௌனம் காப்பது நல்லது.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக இருக்கும். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப காரிய தடைகள் விலகி வெற்றி காண்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்களை காணும் யோகம் உண்டு. ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்களை சந்திக்க நேரும் என்பதால் எச்சரிக்கை தேவை.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய நபர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து மோதல்கள் நீங்கும். ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருந்த நீண்ட நாள் கேள்விகளுக்கான விடை கிடைக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டி, பொறாமைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதுரியமாக சாதிக்கக் கூடிய நல்ல நாளாக நாளாக இருக்கிறது. பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.