இன்றைய ராசிப்பலன் – 15-8-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடலில் இருக்கும் சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூட்டாளிகளின் வழியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனைவி வழி தேர்தல் மூலம் நல்ல பலன்களை பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நண்பர்களுடைய ஆதரவை எதிர் பார்ப்பீர்கள். நீண்டநாள் இந்த உறவுகள் மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட நல்ல லாபத்தை காணலாம். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்பட கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று பொறுப்புணர்வுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நடக்கும் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. சுயதொழிலில் அடிப்படை தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை முன் நடத்தி செல்லும் வாய்ப்புகள் அமையும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகள் அடங்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும் இதனால் டென்ஷன் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்கால திட்டமிடல் மேலோங்கி காணப்படும். சுயதொழிலில் வரவுக்கு மீறிய செலவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவியிடையே பரஸ்பர ஒற்றுமை நீடிக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். திடீர் எதிர்பாராத மாற்றங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. பதில் இருப்பவர்களுக்கு வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யும் வாய்ப்புகள் அமையும். மனக்குழப்பம் தீரும் வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே நடந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அதிரடியான திட்டங்களை தீட்டி புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் கருத்துக்கு கிடைக்கும் ஆதரவை நினைத்து பெருமைப்படுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூல பலன் உண்டாகும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தனிப்பட்ட சுபகாரிய முயற்சிகளில் வெற்றி காண கூடிய யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முற்படுவீர்கள். உங்களுடைய நாணயம் மற்றவர்களுக்கு விழிப்படைய செய்யும். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சில விஷயங்களை மறந்து போக வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் தடைபட்ட சில விஷயங்களுக்கு முடிவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறுவதில் இடையூறுகள் ஏற்படலாம். வெளி மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். பயணங்களின் பொழுது கவனம் தேவை.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை மேலும் அதிகரிக்கச் செய்யாமல் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். மற்றும் வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இனிய நாளாக இருக்கும். அதிகம் பொறுமை தேவைப்படும் நாளாக அமைய இருக்கிறது.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் தாங்க கூடிய மனோதிடம் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்களை சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர்கள்? என்பதை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தலைமை அதிகாரிகளிடம் இணக்கத்துடன் செல்வீர்கள். ஆரோக்கியம் சீராகி வரும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலன்களை கொடுக்கும்.