இன்றைய ராசி பலன் – 16-10-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பேச்சை குறைத்துக் கொண்டு வேலையில் ஈடுபடுவது மிகவும் நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய பொறுப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த பொறுப்புகளை சரியாக முடிக்க வேண்டுமே என்கிற மன உளைச்சல் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது பிரச்சனைகள் வலு பெறாமல் தடுக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் லாபத்தில் குறைவிருக்காது. உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் சக பணியாளர்களின் ஆதரவை நாடி செல்வீர்கள். உங்களின் முன்கோபத்தால் சிலரின் அதிருப்திக்கு ஆளாக வாய்ப்புகள் உள்ளன.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி வாய்ப்புகள் கிடைக்க கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். நீண்டநாள் வரவேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான பண பரிவர்த்தனை தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரணையாக செல்வது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் இன்னும் அதிக உழைப்பை போட வேண்டிய நிலைமை இருக்கும். உத்யோகத்தில் பணிபுரிபவர்கள் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. திடீர் பயணங்கள் மூலம் எதிர்ப்பாராத அனுகூல பலன்கள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம். எதை செய்வது என்கிற குழப்பமான மனநிலை காணப்படும். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் ஒரு முறைக்கு பல முறை நன்றாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. தொழில் ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக அமையும். தொழில் ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருக்கும் பிடிவாதம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. பிடிவாத குணத்தால் தேவையற்ற இழப்புக்களைச் சந்திக்க நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது தான் உங்களுக்கு நல்லது. கணவன் மனைவிக்கு இடையேயான தீர்வதற்கு ஆலோசனை செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல விருத்தி காணப்படும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் செலுத்துவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பழைய நினைவுகள் வந்து போகும் சூழ்நிலை உருவாகும். கடந்த கால நினைவுகளை அசை போடுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பிரச்சனைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு இருந்துவந்த போட்டிகள் குறையும். பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவை சாதக பலன் தரும். பெண்களுக்கு வேலைப் பளு அதிகரிப்பதால் டென்ஷன் இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூக மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு உயர்வதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். பிள்ளைகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். எந்த முடிவையும் நன்கு ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. இல்லத்தில் நல்ல செய்திகள் வந்துசேரும். பிள்ளை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு உடன் பணிபுரியும் கூட்டாளிகளால் முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகிப்புத் தன்மை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. எப்போதும் மற்றவர்களை அனுசரித்து செல்லும் உங்களுடைய ராசிக்கு இன்றைய நாள் விருத்தியை ஏற்படுத்தும். என்னடா இது வாழ்க்கை என்கிற மாதிரியான சூழ்நிலை உருவாகும். எனினும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கம் திரும்பும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி உண்டாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் அதிக நாட்டம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இரக்க குணம் கொண்ட நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொள்வீர்கள். குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் மகிழ்ச்சியும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய பொருட்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.