இன்றைய ராசி பலன் – 1-8-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில் நல்ல பலன் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் ஜெயம் உண்டாகும். தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் தடை இல்லாமல் நிறைவேறக் கூடிய அற்புத வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட அதிக லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படுவதில் இடையூறுகள் தொடர்ந்து நீடிக்கும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிப்பீர்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் மறக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் புது நபர்களின் வருகை உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் தடை தாமதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்தநிலை காணப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன் உண்டு. ஆரோக்கியம் சிறக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடந்த கால நிகழ்வுகளை அசை போட்டு பார்க்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகளின் தொல்லைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர புதிய உத்திகளை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் முயற்சி செய்து நல்ல லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்கும் திறமை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாய் கூடுமானவரை விட்டு கொடுத்து செல்வது நல்லது.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் முடிவெடுத்து விடாதீர்கள். ஒன்றுக்கு பல முறை ஆலோசனை செய்து விட்ட முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலமான பலன்களை பெற சமயோசிதமாக செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி காண கூடிய யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொருள் வாங்கும் யோகம் உண்டு. நண்பர்களின் ஆதரவு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி வரும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் உங்களுடைய பங்களிப்பு உயர்ந்ததாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய கருணையான குணத்தினால் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவலைகள் மறந்து உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் எனவே கூடுமானவரை திட்டமிட்டு செயல்படுவது உத்தமம். புதிய தொழில் முயற்சிகளில் எதிர்பார்க்கும் லாபம் காண்பீர்கள். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம்.