இன்றைய ராசி பலன் – 31-07-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடத்திக் காட்டக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய கை ஓங்கி இருக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வம்பு வழக்குகளைத் தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதை எடுத்தாலும் அதில் ஜெயம் உங்களுக்கு தான். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனைகள் தீர கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி உறவுக்கு இடையே நடக்கும் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்ப்பது உத்தமம்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து எதிலும் வெற்றி காண்பீர்கள். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பக்கபலமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவு கொடுப்பார்கள். உத்யோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது. வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். உங்களுடன் சண்டை போட்டு சென்றவர்கள் அவர்களாகவே வந்து பேசுவார்கள். நீண்டநாள் உறவுகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் அளவிற்கு முன்னேற்றம் உண்டாவதால் சில தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பகைகள் ஒழியும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சில ரகசியங்களை தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். வேலையில்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய முயற்சி செய்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் வீண் விரயங்களை சந்திக்க நேரலாம் என்பதால் கூடுமானவரை சிக்கனம் கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண யோகம் உண்டு. விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வந்தடைய வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு அமையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் இதை எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் என்றாலும் மேலதிகாரிகளின் தொந்தரவு நீடிக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத சில விஷயங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே முன் கோபத்தை தவிர்த்து பொறுமை காப்பது மன அமைதியை உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில சூழ்ச்சிகளைத் தாண்டி வெற்றி காணலாம்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து பொருளாதார ரீதியாக ஏற்றத்தை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்கபெறும். கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையும். மூன்றாம் நபர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார் இதை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திட்டமிட்டு செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள் தீரும். வீட்டில் இருப்பவர்களுக்கு கூடுதல் குடும்ப பாரங்களை சுமப்பதற்கு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தி காட்டுவீர்கள். தடைகளை தகர்த்து சாதனையை படைக்கும் நாளாக அமைய இருக்கிறது.