இன்றைய ராசி பலன் – 30-07-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பான பலன்களைக் காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் தடைபட்ட சில விஷயங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சில விஷயங்களை ஏன் செய்தோம் என்று குழம்பித் தவிக்க நேரிடும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் இணக்கம் ஏற்படும். சுயதொழில் எதிர்பார்ப்பதை விட லாபம் குறைவாக இருக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருப்பது உத்தமம். சுயதொழிலில் நீண்டநாள் நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் வசூல் ஆகும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையும் நிலவும். குடும்பத்தில் தடைப்பட்ட சில விஷயங்கள் தடையில்லாமல் வெற்றி அடைய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் விட்டு சென்ற சில உறவுகள் மீண்டும் வந்தடைய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. வெளியிடங்களில் புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுய தொழில் கூட்டாளிகளுடன் இணக்கமாக நடந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் முன்னேற்றத்தை தரும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்கு நெருக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. நீண்டநாள் சண்டைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து காணப்படும் இதனால் டென்ஷன் ஏற்படலாம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் விஷயங்களில் எதிர்பார்த்தபடி வெற்றி அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய கனவுகள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவது உத்தமம். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய விஷயங்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும். புதிய வரவு ஒன்று நிகழ இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் உதவியுடன் சில தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் யோகம் உண்டு. சக பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன்களை காண இருக்கிறீர்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்களை சந்திக்க இருப்பதால் கூடுமானவரை உணவு கட்டுபாடு மேற்கொள்வது அவசியமாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து கொள்ளவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அரசு வழி அனுகூல பலன்கள் உண்டு.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடிவரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு சுமை ஏற்படும்.