இன்றைய ராசி பலன் – 29-07-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேடும் பொருள் ஒன்று உங்கள் கண்முன்னே இருந்தும் உங்களுக்கு அது தெரியாமல் போக வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

ரிஷபம்:

ரிசப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. உற்றார் உறவினர்களின் வருகை வீண் விரயங்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. பொருளாதாரத்தைச் சமாளிக்க பாடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் காண்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நிதானம் தேவை. முன்பின் தெரியாத நபர்களிடம் செய்யப்படும் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றம் தரும் சூழ்நிலை இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருகும். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செய்யும் செயல்களில் வெற்றி காண கூடிய அற்புதமான பலன்கள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி அடைய கூடிய அற்புத வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பணி சிறப்பாக இருக்கும். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அதையும் தடையில்லாமல் வெற்றி கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராகி

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது உத்வேகம் பிறக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்டநாள் முயற்சிகளுக்கு உரிய பலன்களை காண்பீர்கள். குடும்பத்தில் புது வரவு உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையப் பெறும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் யோகம் உண்டு. கணவன் மனைவி உறவு சிக்கல்கள் தீரும். ஆரோக்கியம் சீராகும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கஷ்டங்கள் தீர்ந்து நிம்மதி பிறக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் யாரை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பீர்களோ அவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். கணவன் மனைவிக்குள் சண்டைகள் தீரும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமைய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பழைய பாக்கிகள் வசூலாகும்

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நெடிய தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் சிறப்பாக அமையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு தேவையான விஷயங்களை தைரியமாக கேட்டுப் பெறுவீர்கள். பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடி வரும் யோகமுண்டு. மனதிற்கு பிடித்தமான வரங்கள் அமையப் பெறலாம். புதிய சொத்துக்கள் மற்றும் பொருட்கள் வாங்கும் முயற்சிகளில் மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும். சுயதொழிலில் எதிர்பார்ப்பதைவிட அதிர்ஷ்டம் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. முன்பின் தெரியாத அறிமுகம் இல்லாத நபர்களை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அக்கறை, அன்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய விஷயங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களின் உதவிகளைப் பெறுவீர்கள். நினைத்தது நடக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அறிவுப்பூர்வமாக சில விஷயங்களை சிந்தித்து செயலாற்றுவீர்கள். உத்யோகத்தில் நீங்கள் நீண்ட நாட்களாக போராடி கொண்டிருக்கும் ஒரு விஷயம் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்து வைத்த பழைய பாக்கிகள் வசூலாக கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை மூன்றாம் நபர்களுக்கு தெரிவிப்பதை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை சிக்கனம் மேற்கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனை ஆகும். புதிய யுத்திகளை கையாள்வதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற சந்தேகங்களை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அடிப்படை குடும்ப தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. முன் கோபத்தை குறைத்து நிதானம் கடைபிடித்தால் மன அமைதி கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.