இன்றைய ராசி பலன் – 27-07-2021

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத தீடீர் திருப்பங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமையும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து மோதல்கள் வலுவாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் சீராக இருக்கும். ஆரோக்கியம் கவனம் வேண்டும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே நடக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும் வாய்ப்புகள் உண்டு. பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்காத சில விஷயங்கள் மனதிற்கு உளைச்சலை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளுடன் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் தொந்தரவு வழுவாக வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ ஒருவரை ஒருவர் அனுசரித்து விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிக லாபம் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளுடன் இணக்கமாக செல்லும் வாய்ப்புகள் அமையும். அதன் மூலம் புதிய தொழில் விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வெளியிட பயணங்களின் போது சற்று கவனமுடன் இருந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் சில பேச்சுவார்த்தைகள் எரிச்சலை உண்டாக்கும் வகையில் அமையும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பங்களிப்பு திருப்திகரமாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவ கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து புரிந்து கொண்டு நடந்து கொள்வது நல்லது. பொருளாதாரம் ஏற்ற இறக்கம் தரும் வகையில் இருக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து மோதல்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட வழி பயணங்களை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையலாம். பயணங்களில் கவனம் தேவை. சிலருக்கு வீண் பழிகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத நல்ல செய்திகள் வீட்டிற்கு வந்து சேரும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக இருக்கும். இதுவரை நிலவிவந்த போட்டி, பொறாமைகள் குறையும். ஆரோக்கியம் சீராகி வரும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவது தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு ஊதிய உயர்வு, பதவி வியர்வுபோன்றவை கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கமான சூழ்நிலைகளை செயல்களை திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற முன்கோபத்தை தவிர்த்துக் கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக முறையில் நடந்து கொள்வது உத்தமம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி பெறலாம். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் சிறப்பான பலன்களைக் காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் பலன் தரும் வகையில் அமைய இருக்கிறது. தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு வளமான பலன்கள் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.